INDvsENG டெஸ்ட் தொடர்.. இங்கிலாந்து நட்சத்திர வீரர் திடீர் விலகல்.. உடனடியாக மாற்று வீரர் அறிவிப்பு

0
242
England

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதற்கென இங்கிலாந்து அணி சிறப்பு பயிற்சி முகாமை அபுதாபியில் அமைத்து ஒன்பது நாட்கள் பயிற்சி பெறுகிறது. மேலும் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் கொண்ட கூட்டணியை இந்தியாவுக்கு அழைத்து வருகிறது.

- Advertisement -

ஒருபக்கம் இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவில் டெஸ்ட் விளையாடுவது குறித்து எதார்த்தமாக பேசி வருகின்ற நிலையில், இன்னொரு புறத்தில் இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துக்களை பேசி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்திய அணி தரப்பில் மிக அமைதியாக எல்லாம் சென்று கொண்டிருக்கிறது. இந்திய அணி இந்த தொடருக்கான பயிற்சியை ஆரம்பித்திருக்கிறது.

நடைபெற்று வரும் 2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ள இருக்கும் இந்த டெஸ்ட் தொடர் இந்த இரு அணிகளுக்கு மட்டும் அல்லாமல், ஆஸ்திரேலியா நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க என மூன்று அணிகளுக்கும் மிக முக்கியமாக அமைந்திருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரின் முடிவுகள் இந்த பணிகளின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வாய்ப்பில் தாக்கம் செலுத்தும்.

- Advertisement -

இவ்வளவு முக்கியத்துவம் இருக்கின்ற காரணத்தினால் இங்கிலாந்து அணி நிர்வாகம் இந்த தொடருக்கு ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்து வருகிறது.

இப்படியான நிலையில் இங்கிலாந்து அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரம் ஹாரி ப்ரூக் தனிப்பட்ட காரணங்களுக்காக திடீரென தொடரை விட்டு விலகி இருக்கிறார். இது இங்கிலாந்து அணிக்கு பெரிய பின்னடைவாக தற்பொழுது அமைந்திருக்கிறது.

இவர் மொத்தம் 12 டெஸ்ட் போட்டிகளில் 20 இன்னிங்ஸ்களில் விளையாடி அதிரடியாக நான்கு சதம் மற்றும் ஆறு அரை சதங்கள் எடுத்து 1181 ரன்கள் அடித்திருக்கிறார். குறிப்பாக இவரது டெஸ்ட் கிரிக்கெட் ஆவரேஜ் 61 ரன்கள் எனவும், ஸ்ட்ரைக் ரேட் 91 எனவும் பிரம்மாண்டமாக இருக்கிறது.

இவர் விலகியதும் இவருடைய இடத்திற்கு இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அதிரடியாக டான் லாரன்ஸை அறிவித்திருக்கிறது. ஹாரி ப்ரூக் திடீர் விலகல் இந்திய சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்துக்கு ஒரு பெரிய பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை.