INDvsENG 2வது டெஸ்ட்.. நாளை வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் லெவன்.. அறிமுகமாவது யார்

0
635
ICT

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இந்தியா வந்திருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிராக நாளை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மோதுகிறது.

இந்த போட்டியில் இந்திய அணியின் மிக முக்கியமான நட்சத்திர வீரர்களான கேஎல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் காயத்தால் விலகி இருக்கிறார்கள். விராட் கோலி தனிப்பட்ட காரணங்களால் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார்.

- Advertisement -

இந்த மூவருடைய இடத்துக்கும் இந்திய அணியில் ரஜத் பட்டிதார், சர்பராஸ் கான் வாஷிங்டன் சுந்தர் சவுரப் குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதிலிருந்து இருவருக்கு மட்டுமே வாய்ப்புகள் கிடைப்பதற்கான சாத்தியங்கள் அதிகம். இருவர் யார் என்பது தான் சுவாரசியமான கேள்வியாக இருக்கும்.

மேலும் தற்போதைய விசாகப்பட்டின மைதான ஆடுகளம் வேகப்பந்துவீச்சிக்கும் கொஞ்சம் ஒத்துழைக்கும் என்பது போல் தெரிவதாக இங்கிலாந்து துவக்க ஆட்டக்காரர் ஜாக் க்ரவுலி கூறி இருக்கிறார். இதன் காரணமாக முகமது சிராஜை வெளியில் வைப்பது கடினம்.

எனவே கே எல் ராகுல் இடத்துக்கு ஏற்கனவே விராட் கோலியின் இடத்துக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்த ரஜத் பட்டிதார் விளையாடுவார் என்பது பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

- Advertisement -

ரவீந்திர ஜடேஜா இடத்துக்கு ஏற்கனவே இந்திய அணியில் அஸ்வின் மற்றும் அக்சர் படேல் என வலது மற்றும் இடதுகை விரல் சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். எனவே மாற்று வகை பந்துவீச்சை தரக்கூடிய இடது கை மணிக்கட்டு சுழற் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் விளையாடுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இந்த வகையில் மேற்கொண்டு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் புதிய வீரர்கள் யாருக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்காது என்பது போல்தான் தெரிகிறது. சர்ப்ராஸ் கான் விளையாடுவது கொஞ்சம் கடினம்.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய பிளேயின் லெவன் :

ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, சுப்மன் கில், ரஜத் பட்டிதார், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎஸ்.பரத், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்ட்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ்.