INDvsAUS.. இந்தியாவின் வெற்றியை பறித்த மேக்ஸ்வெல்.. ரோகித் சர்மா உலக சாதனை சமன்!

0
3131
Australia

இன்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் கடைசிப் பந்தில் ஆஸ்திரேலியா அணி திரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசியது. இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 6 ரன், இசான் கிஷான் ரன் ஏதும் இல்லாமல் வெளியேறினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து ருத்ராஜ் உடன் சூரியகுமார் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 39 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதுவரையில் ருதுராஜ் மிகப் பொறுமையாக ஆடி வந்தார்.

இதற்கு அடுத்து திலக் வர்மா உடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடிய ருத்ராஜ் 52 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 சதத்தை அடித்தார். மேலும் இறுதிவரை களத்தில் நின்று 57 பந்தில் ஏழு சிக்ஸர் மற்றும் 13 பவுண்டரிகளுடன் 123 ரன்கள் குவித்தார். திலக் வர்மா 31 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 222 ரன்கள் குவித்தது.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு டிராவிஸ் ஹெட் 18 பந்தில் 38 ரன்கள், ஆரோன் ஹார்டி 12 பந்தில் 16 ரன்கள், ஜோஸ் இங்லீஷ் 6 பந்தில் 10 ரன்கள், ஸ்டாய்னிஸ் 21 பந்தில் 17 ரன்கள், டிம் டேவிட் ரன் ஏதும் இல்லாமல் வெளியேறினார்கள்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணி 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. கடைசி ஐந்து ஓவர்களில் வெற்றிக்கு 78 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்த இரண்டு ஓவர்களில் 29 ரன்கள் வந்தது. 18வது ஓவரில் பிரசித் கிருஷ்ணா 8 ரன் மட்டும் விட்டு தந்தார்.

இதையடுத்து கடைசி இரண்டு ஓவர்களுக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை வீசிய அக்சர் படேல் 22 ரன்கள் தர கடைசி ஓவருக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை வீசிய பிரசித் கிருஷ்ணா முதல் 5 பந்துகளில் 19 ரன்கள் கொடுத்தார். கடைசிப் பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பவுண்டரி அடித்து மேக்ஸ்வெல் வெற்றி பெற வைத்தார்.

இறுதிவரை களத்தில் நின்ற மேக்ஸ்வெல் 48 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உடன் 104 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா வீரர் அடித்த அதிவேக டி20 சதமாக இது பதிவாகியது. மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நான்காவது சதத்தை அடித்து, அதிக சதம் அடித்த ரோகித் சர்மாவை சமன் செய்தார். இவருடன் விளையாடிய கேப்டன் மேத்யூ வேட் 16 பந்தில் 28 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியாவின் இந்த வெற்றியின் மூலம் தற்பொழுது 2-1 எனத் தொடர் நிற்கிறது. எஞ்சி உள்ள இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியை வென்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.