INDvsAUS.. லேடி ஷேவாக் மிரட்டல் அடி.. சாது மெர்சல் பவுலிங்.. ஆஸியை இந்தியா துவம்சம் செய்தது!

0
913
Sadhu

ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் தற்பொழுது விளையாடிக் கொண்டு வருகிறது.

இதில் முதலில் நடைபெற்ற ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கைப்பற்றியது. இதற்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி முழுமையாக கைப்பற்றியது.

- Advertisement -

இந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்றது. போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

இந்திய அணியின் வீராங்கனை டைட்டஸ் சாது மிகச் சிறப்பாக செயல்பட்டு ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய சரிவை உண்டாக்கினார்.

ஆஸ்திரேலியா அணியின் லிட்ச்ஃபீல்டு 49, எல்லீஸ் பெரி 37 ரன் என மட்டுமே குறிப்பிடும்படி எடுத்தார்கள். 19.2 ஓவரில் 141 ரன்கள் மட்டும் எடுத்து ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

- Advertisement -

இந்திய அணியின் டைட்டஸ் சாது 4 ஓவர்கள் பந்து வீசி 19 ரன்கள் தந்து நான்கு விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஸ்ரீயங்கா படேல் மற்றும் தீப்தி சர்மா இருவரும் தல இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு துவக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா மிகச் சிறப்பான துவக்கம் தந்தார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 15.2 ஓவரில் 137 ரன்கள் குவித்தது. ஸ்மிருதி மந்தனா 52 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இறுதிவரை களத்தில் நின்ற மற்றும் ஒரு துவக்க வீராங்கனை லேடி ஷேவாக் ஷபாலி வர்மா ஆட்டம் இழக்காமல் 44 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 64 ரன்கள் எடுக்க, இந்திய அணி 17.4 ஓவரில் இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.