“INDvsAUS.. அதுக்குள்ள இன்னொரு தொடரா?.. பிளேயர்ஸ் ரொம்ப பாவங்க..!” – லபுசேன் ஆச்சரியமான பேட்டி!

0
838
Labuschagne

இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் முடிந்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்டன.

இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் துவங்குகிறது.

- Advertisement -

உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய தொடர் நடந்து முடிந்து அதன் இறுதிப்போட்டியில் விளையாடிய அணிகள் இரண்டும், அடுத்த மூன்று நாட்களில் இன்னொரு ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவது என்பது ஆச்சரியமான ஒன்று.

இரு அணி வீரர்களுக்குமே உடல் சோர்வு என்பதை தாண்டி, மனசோர்வு என்பது இங்கு முக்கியமான விஷயம். ஆனால் நவீன கிரிக்கெட் காலகட்டத்தில் பெரிய கிரிக்கெட் நாடுகள் தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டே இருக்கின்றன.

இப்படி தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாட எளிமையான டி20 கிரிக்கெட் வடிவம் உதவியாக இருக்கிறது. மேலும் இப்படி விளையாடுவதின் மூலம் ஒவ்வொரு பெரிய கிரிக்கெட் வாரியங்களும் பெரிய அளவில் பணத்தை ஈட்டுகின்றன. எனவே இனி போட்டி அட்டவணைகள் வீரர்களுக்கு மிக கடினமாகவே அமையும். குறிப்பாக ஆஸ்திரேலியா இந்தியா இங்கிலாந்து போன்ற பெரிய அணிகளுக்கு!

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள லபுசேன் கூறுகையில் ” இன்று மற்றொரு ஆட்டம் நடப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதை புரிந்து கொள்வது மிகவும் கடினம். சில நாட்களில் அந்த வீரர்கள் எப்படி மீண்டும் விளையாடப் போகிறார்கள் என்பதை யோசித்து புரிந்து கொள்வதற்கு கடினமாக இருக்கிறது.

ஆனால் இதுதான் போட்டி குறித்து திட்டமிடுதலில் இயல்பாக மாறி வருகிறது. ஆனால் நாடு திரும்பி உள்ள எங்களுக்கு முதல் டெஸ்ட் விளையாட இன்னும் மூன்று வாரங்கள் உள்ளன. எனவே தோழர்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள். அடுத்த சவாலுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்வார்கள்!” என்று கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு 2024 ல் டி20 உலக கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. எனவே இந்த உலக கோப்பையில் விளையாட உள்ள அணிகள் அதற்கான முன் தயாரிப்புகளில் இனி ஈடுபடும். எனவே இனி டி20 கிரிக்கெட் வழக்கமாக இருப்பதைப் போல அதிகமாக காணப்படும்!