INDvsAFG டி20.. உத்தேச இந்திய பிளேயிங் லெவன்.. 14 மாதத்திற்குப் பிறகு அதிரடி!

0
858
Virat

இந்திய அணி நாளை மறுநாள் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக முதல் முறையாக இரு நாடுகளுக்கு இடையேயான வெள்ளைப்பந்து தொடரில் விளையாடுகிறது.

இந்தியாவில் நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்திய அணி இந்த முறை கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் விளையாடுகிறது.

- Advertisement -

தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்த தொடருக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணிக்கு விராட் கோலியும் திரும்பியிருக்கிறார். சஞ்சு சாம்சன் திரும்ப அழைக்கப்பட்டிருக்கிறார். இவர்கள் இருவரும் 14 மாதத்திற்கு பிறகு இந்திய டி20 அணிக்கு திரும்புகிறார்கள்.

இந்த நிலையில் இசான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். அதே சமயத்தில் ஆவேஷ் கான், முகேஷ் குமார் மற்றும் அர்ஸ்தீப் சிங் என மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

இன்னொரு பக்கத்தில் தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் நீக்கப்பட்ட அச்சர் படேல் வந்திருக்கிறார். இவருடன் சுழற் பந்துவீச்சாளர்களாக வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் மற்றும் ரவி பிஸ்னாய் இருக்கிறார்கள்.

- Advertisement -

துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், கில் மூன்று பேர் இருக்க, கேப்டன் ரோஹித் சர்மா உடன் இடதுகை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் துவக்க வீரராக களம் இறங்கவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது. மூன்றாவது இடத்தில் விராட் கோலி வர, நான்காவது இடத்தில் திலக் வர்மா இருப்பார்.

பேட்டிங் யூனிட்டில் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் ரிங்கு சிங் மற்றும் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா இருப்பார்கள். சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொஞ்சம் கடினம். ஏழாவது இடத்தில் அக்சர் படேல் சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டராக இடம் பெறுவார்.

மீதி நான்கு இடங்களுக்கு குல்தீப் யாதவ், அர்ஸ்தீப் சிங், ஆவேஷ் கான் மற்றும் முகேஷ் குமார் நால்வரும் வருவார்கள். இந்த பிளேயிங் லெவன் அமைவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது.

ஆப்கானிஸ்தான அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான உத்தேச இந்திய பிளேயிங் லெவன்:

ரோகித் சர்மா, ஜெயஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஸ்தீப் சிங், ஆவேஷ் கான் மற்றும் முகேஷ் குமார்!