INDvsAFG டி20 மேட்ச்.. நாளை போட்டி நடக்குமா?.. மழை வாய்ப்பு எப்படி இருக்கிறது?.. வானிலை அறிக்கை!

0
277
ICT

ஆப்கானிஸ்தான அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு தற்பொழுது இந்தியா வந்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணி கடந்த இரண்டு மூன்று வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்டு மிகச் சிறப்பான செயல்பாட்டைக் கொண்ட அணியாகவும், வெள்ளைப் பந்தில் எந்த அணியையும் வீழ்த்தக்கூடிய திறன் படைத்த அணியாகவும் மாறி இருக்கிறது.

- Advertisement -

நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஏறக்குறைய அரை இறுதி சுற்றுக்கான வாய்ப்புகள் இருந்து, கடைசி நேரத்தில் தகுதிப் பெற முடியாமல் வெளியேறியது. ஆனாலும் ஆப்கானிஸ்தான அணி யாரும் எதிர்பார்க்காத சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

மேலும் t20 உலக கோப்பைக்கு முன்பாக இந்திய அணி விளையாட இருக்கும் கடைசி சர்வதேச டி20 தொடர் இதுதான் என்கின்ற காரணத்தினால், இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் இந்த டி20 தொடருக்கு முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணியின் தரப்பில் ரஷீத் கான் அணி உடன் இருந்தாலும் முதுகில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை காரணமாக அவர் இந்த தொடரில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. துவக்க இளம் ஆட்டக்காரர் இப்ராகிம் ஜெட்ரன் கேப்டனாக வழிநடத்துகிறார்.

- Advertisement -

இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் 14 மாதங்கள் கழித்து திரும்பி இருக்கிறார்கள். மேலும் ரோகித் சர்மா இந்திய அணியை கேப்டனாக வழிநடத்த இருக்கிறார். இவர்கள் இருவரும் டி20 உலக கோப்பையில் விளையாடுவார்கள் என்பதும் பெரிய வருகிறது.

இந்த தொடரின் முதல் போட்டி நாளை பஞ்சாப் மொகாலியில் அமைந்துள்ள பிந்த்ரா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. நாளை போட்டி 40 ஓவர்களும் நடைபெறுவது இரண்டு அணிகளுக்குமே முக்கியமான ஒன்று.

பஞ்சாப் மொகாலியில் மாலை நேரத்தில் குளிர் அதிகமாக காணப்படும். போட்டி நேரத்தில் 14 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் இருந்து படிப்படியாக 9 டிகிரி செல்சியஸ்க்கு வெப்பநிலை குறையும். ஆனாலும் போட்டியின் போது மழை வருவதற்கான வாய்ப்புகள் கிடையாது என்று வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. எனவே நாளைய போட்டியில் 40 ஓவர்களும் முழுமையாக வீசப்பட அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது!