INDvsAFG.. நாளை உத்தேச இந்திய பிளேயிங் லெவன்.. கோலி ஓபனிங்?.. கில் திலக் அவுட்!

0
244
Virat

இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்பொழுது இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் பஞ்சாப் மாநிலம் மொகாலி மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேட்டிக் மற்றும் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு சிவம் துபே ஆட்டநாயகன் விருது வென்றார்.

- Advertisement -

இந்த நிலையில் நாளை தொடரின் இரண்டாவது போட்டி இந்தூர் கோல்கர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் பேட்டரி செய்வதற்கு மிகவும் சாதகமான மைதானங்களில் இந்த மைதானம் மிக முக்கியமானது.

முதல் டி20 போட்டியில் தனிப்பட்ட காரணங்களால் விளையாடாமல் விடுப்பு எடுத்துக் கொண்ட விராட் கோலி இரண்டாவது டி20 போட்டிக்கு திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவம் துபே சிறப்பாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் செயல்பட்டு இருக்கின்ற காரணத்தினால், திலக் வர்மா வெளியேற்றப்பட்டு, அந்த இடம் விராட் கோலிக்கு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மேலும் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளம் என்கின்ற காரணத்தினால் அக்ஷர் படேலை மட்டும் வைத்துக்கொண்டு, கடந்த போட்டியில் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் விளையாடியதில் மேலும் கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளரை சேர்க்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் ஆவேஷ் கான் இடம் பெறலாம்.

மேலும் ஜெய்ஸ்வால் உடல்நலம் சரியாகி இருந்தால், கில் நீக்கப்பட்டு அவர் விளையாடுவார் என்று தெரிகிறது. எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக வில் மட்டும் நீக்கப்பட்டு அவருடைய இடம் விராட் கோலிக்கு கொடுக்கப்பட்டு, ரோகித் விராட் கோலி துவக்க வீரராக வருவார்களா? என்பதுதான் இதில் மிகப்பெரிய சுவாரசிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. அப்படி ஒன்றை செய்வதில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான உத்தேச வலிமையான இந்திய பிளேயிங் லெவன் :

ரோகித் சர்மா, ஜெய்ஷ்வால், விராட் கோலி, சிவம் துபே, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னாய், அர்ஸ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார்!