INDvsAFG..15ஓவரில் மேட்ச் ஃபினிஷ்.. ஜெய்ஸ்வால் துபே சூறாவளி இன்னிங்ஸ்.. ஆப்கனை வீழ்த்தி இந்தியா தொடரை வென்றது

0
236
Jaiswal

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் இந்தியாவில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

இந்த நிலையில் இன்று இரண்டாவது போட்டி இந்தூர் ஹோல்ஹர்மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாசில் இந்திய அணியின் கேப்டன் வெற்றி பெற்று முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.

- Advertisement -

இந்திய அணியில் கில் நீக்கப்பட்டு ஜெய்ஸ்வாலும், திலக் வர்மா நீக்கப்பட்டு விராட் கோலியும், ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மத் ஷா நீக்கப்பட்டு நூர் அகமதுவும் சேர்க்கப்பட்டார்கள்.

பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ் 14, கேப்டன் இப்ராகிம் ஜட்ரன் 8 என சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்கள்.

இதற்கு அடுத்து இளம் ஆல் ரவுண்டர் ஓமர் சாய் 2, முகமது நபி 14, நஜிபுல்லா ஜட்ரன் 23, கரீம் ஜனத் 20, முஜீப் 20, நூர் அகமது 1, நவீன் உல் ஹக் 1*, பரூக்கி 0 எனப் பெரிய பங்களிப்புகள் வரவில்லை.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணிக்கு மூன்றாவது இடத்தில் களம் இறங்கிய குல்பதின் நைப் 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் என அதிரடியாக 57 ரன்கள் எடுக்க, ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் சேர்த்தது. இந்திய தரப்பில் அர்ஸ்தீப் சிங் 3, ரவி பிஸ்னாய் மற்றும் அக்சர் கடையில் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து களம் இறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலேயே கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இந்தப் போட்டிக்குத் திரும்பிய விராட் கோலி அதிரடியான அணுகுமுறையில் விளையாடி 16 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து ஜெய்ஸ்வால் மற்றும் சிவம் துபே இருவரும் ஜோடி சேர்ந்து ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை வதம் செய்து விட்டார்கள். வெளுத்து வாங்கிய ஜெய்ஸ்வால் 4 பவுண்டரி 4 சிக்ஸர் உடன் 27 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார். இவருடன் சேர்ந்து விளையாடிய சிவம் துபே 22 பந்துகளில் இந்த தொடரில் இரண்டாவது அரைசதத்தை அடித்தார்.

இந்த ஜோடி சேர்ந்து அதிரடியாக 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஜெய்ஸ்வால் இறுதியாக 34 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 6 உடன் 68 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

இதற்கு அடுத்து வந்த ரிங்கு சிங் ஆட்டம் இழக்காமல் 9 பந்துகளில் 9 ரன்கள் எடுக்க, கடந்த போட்டி போலவே இந்த போட்டியிலும் சிவம் துபே நின்று 32 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 63 ரன்கள் எடுத்து, 15.4 ஓவரில் அணியை வெற்றி பெற வைத்தார். இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றியது. ஆப்கானிஸ்தான் தரப்பில் கரீம் ஜனத் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.