INDvsAFG.. கடைசி 30 பந்து 103 ரன்.. ரோகித் சர்மா ரிங்கு ரெக்கார்ட் பார்ட்னர்ஷிப்.. மறக்க முடியாத இன்னிங்ஸ்

0
480
Rohit

தற்போது இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது டி20 போட்டியில், இந்திய அணி பெரிய சரிவில் இருந்து மீண்டதோடு, மிகப்பெரிய ஸ்கோரையும் அடித்து அசத்தியிருக்கிறது.

இன்று மூன்றாவது போட்டி நடக்கும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தின் ஆடுகளம் வழக்கம் போல் பேட்டிங் செய்ய சாதகமானதாக இல்லை. கணிக்க முடியாத வேகத்தில் பேட்ஸ்மேன்களுக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுப்பதாக இருந்தது.

- Advertisement -

ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து விளையாடாமல் அதிரடியாக விளையாடும் நோக்கத்தின் காரணமாக ஜெய்ஸ்வால், விராட் கோலி, சிவம் துபே மற்றும் சாம்சன் என அனைவரும் நான்கு ஓவர்களில் வெளியேறினார்கள்.

இந்திய அணி 4.3 ஓவரில் 22 ரன்களுக்கு நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. மேலும் இன்று அணியில் ஏழு பேட்ஸ்மேன்கள் மட்டுமே இருந்தார்கள். இப்படியான நிலையில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ரிங்கு சிங் இருவரும் ஜோடி சேர்ந்தார்கள்.

இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடியது ஆனால் மெதுவாக விளையாடவில்லை. பந்தை அடிக்கும் நோக்கத்தை கைவிடவே இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுத்த இந்த ஜோடி 15 ஓவர்களில் அணியை 109 ரன்களுக்கு எடுத்து வந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து நடந்தது தான் ருத்ர தாண்டவம். 16வது ஓவரில் ஆரம்பித்த அதிரடி தாக்குதல், கடைசி ஓவரின் கடைசிப் பந்து வரை நிற்கவில்லை. இந்த 30 பந்துகளில் இந்த ஜோடி 103 ரன்கள் குறித்து பிரம்மிக்க வைத்தது.

கரீம் ஜனத் வீசிய கடைசி ஓவரில் மட்டும் இந்த ஜோடி ஒட்டுமொத்தமாக 36 ரன்கள் எடுத்தது. குறிப்பாக கடைசி மூன்று பந்துகளை ரிங்கு சிங் ஹாட்ரிக் சிக்ஸர்களாக நொறுக்கி அமர்க்களப்படுத்தினார்

ஒட்டு மொத்தமாக இந்த ஜோடி 100 பந்துகளை சந்தித்து 190 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக இந்திய அணிக்காக அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்கிற சாதனையைப் படைத்தது.

இதற்கு முன்பு அயர்லாந்துக்கு எதிராக சஞ்சு சாம்சன் மற்றும் தீபக் ஹூடா 176 ரன், ரோஹித் சர்மா மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் முதல் விக்கெட்டுக்கு இலங்கைக்கு எதிராக 165 ரன்கள் எடுத்திருந்தார்கள். இதேபோல் வெஸ்ட் இண்டிஸ்க்கு எதிராக கடந்த ஆண்டு ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் அதே 165 ரன்கள் எடுத்திருந்தார்கள். தற்பொழுது இது முறியடிக்கப்பட்டிருக்கிறது.

ஆட்டம் இழக்காத இந்த ஜோடியில் ரோஹித் சர்மா 69 பந்துகளில் 121 ரன், ரிங்கு சிங் 39 பந்துகளில் 69 ரன்கள் எடுக்க, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்திருக்கிறது.