தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20ல் களமிறங்கும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!

0
2773

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணி இங்கே கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா இரு அணிகளும் மோதும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் செப்டம்பர் 28ஆம் தேதி துவங்கி அக்டோபர் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

- Advertisement -

அதன் பிறகு நடைபெறும் இத்தொடரில் முதல் போட்டி திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இரு அணிகளும் நேற்றைய தினம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். தென்னாப்பிரிக்கா அணியும் கடைசியாக அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியா வந்திருக்கிறது. இரு அணி வீரர்களும் வெற்றியை ருசித்து விட்டு அடுத்த தொடரை எதிர்கொள்வதால் நல்ல மனநிலையில் காணப்படுவார்.

வலுவான தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்வதற்காக முதல் டி20 போட்டியில் களம் இறங்கும் இந்திய அணியின் 11 பேர் யார் என்பதை இங்கு கணித்துள்ளோம்.

எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி துவக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா இருவரும் இருக்கின்றனர். கே எல் ராகுல் ஆஸ்திரேலியா தொடரின் முதல் போட்டியில் 55 ரன்கள் அடித்தார். ரோகித் சர்மா இரண்டாவது டி20 போட்டியை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார். 20 பந்துகளில் 46 ரன்கள் விலாசினார்.

- Advertisement -

மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் நல்ல ஃபார்மில் இருக்கும் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் இடம் பெறுவர். இருவரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றுவதற்கு முழு முக்கிய காரணமாக திகழ்ந்தனர்.

ஐந்தாவது இடத்தில் தினேஷ் கார்த்திக் இருக்கிறார். இவருக்கு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரின் போது, ரிசப் பண்ட்டிற்கு முன்னதாக களமிறக்க வாய்ப்புகள் உள்ளது. ரோகித் சர்மா பேட்டியிலும் அது தெரிந்தது. ஆறாவது இடத்தில் வழக்கமாக ஹர்திக் பாண்டியா இறங்குவார். தென்னாபிரிக்கா தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறார். ஆகையால் ரிஷப் பண்ட் இந்த இடத்தில் களமிறங்குவார்.

ஏழாவது இடத்தில் தீபக் சஹர் உள்ளே எடுத்து வரப்படலாம். தீபக் ஹூடா காயம் காரணமாக வெளியேறியதால் இவருக்கு அந்த இடத்தில் வாய்ப்பு கிடைக்கலாம். 8வது இடத்தில் பும்ரா இருப்பார். இவருக்கு ஆஸ்திரேலியா தொடர் சிறப்பாக அமையவில்லை. ஆனாலும் காயத்திலிருந்து மீண்டு வந்து சில நாட்களே ஆனதால் சிறிது காலம் கொடுப்பதற்கு இந்திய அணி நிர்வாகம் தயாராக இருக்கிறது.

ஒன்பதாவது இடது சுழல் பந்துவீச்சாளர் சஹல் இருக்கிறார். பத்தாவது இடத்தில் அக்சர் பட்டேல் இருக்கிறார். இவர் வழக்கமாக பேட்டிங்கில் எட்டாவது இடத்தில் களம் இறங்கலாம். ஆஸ்திரேலியா தொடரில் சற்று கீழே இறக்கப்பட்டார். எனில் கூடுதல் பேட்ஸ்மேன்கள் உடன் இந்திய அணி அந்த தொடரில் களமிறங்கியது.

அடுத்ததாக ஆஸ்திரேலியா தொடரின் போது டெத் ஓவர்களில் இந்திய அணி தினறியது. அதை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இளம் வீரர் அர்ஷதிப் சிங் உள்ளே எடுத்து வரப்படலாம். ஆசிய கோப்பை தொடரில் இவர் சிறிது நம்பிக்கையை கொடுத்தார். உலகக் கோப்பை தொடரிலும் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பதால், தென் ஆப்பிரிக்கா தொடரில் இவருக்கு வாய்ப்பு கொடுத்து கூடுதல் நம்பிக்கையை வர வைக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்யலாம்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் உத்தேச 11 வீரர்கள்:

கே எல் ராகுல், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூரியகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், அக்சர் பட்டேல், தீபக் சகர், சஹல், பும்ரா, அர்ஷதீப் சிங்