நெனச்சது நடந்துருச்சு; கேஎல் ராகுல் உட்பட இரண்டு பேர் வெளியே; இந்திய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!

0
10180

இரண்டாவது டெஸ்டில் பங்கேற்கும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் என்று தனது கணிப்பை கூறியுள்ளார் வாஷிம் ஜாபர்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரு அணிகளும் பங்கேற்று வரும் பாடர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடந்தது. இதில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி டெல்லி மைதானத்தில் துவங்குகிறது. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய அணி இதில் வெற்றி பெற்றால் கிட்டத்தட்ட தொடரை உறுதி செய்து விடலாம் என்கிற முனைப்பிலும் இருக்கிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றாலும் ஒரு சில மாற்றங்களை இந்திய அணியில் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. கடந்த போட்டியில் நல்ல துவக்கம் கிடைக்கவில்லை. ஆகையால் கேஎல் ராகுல் வெளியில் அமர்த்தப்பட்டு ஷுப்மன் கில் ஓப்பனிங் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

அதற்கேற்றவாறு தனது அணியில் கேஎல் ராகுலை வெளியேற்றி ஷுப்மன் கில்லை பிளேயிங் லெவனில் வைத்திருக்கிறார் வாஷிம் ஜாபர்.

- Advertisement -

மேலும் கடந்த போட்டியில் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடவில்லை. சூர்யகுமார் விளையாடவைக்கப்பட்டார்.

ஷ்ரேயாஸ் தனது உடல் தகுதியை நிரூபித்துவிட்டார். பிட்டாக இருக்கிறார் என்று உறுதி செய்யப்பட்டுவிட்டது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு அவர் இருப்பார் என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் வாஷிம் ஜாபர் இந்த மாற்றத்தை செய்திருக்கிறார். சூர்யகுமார் யாதவ் வெளியேறுகிறார்.

இந்த இரண்டு மாற்றங்கள் தவிர முதல் டெஸ்ட் போட்டியில் இருந்த வீரர்கள் மீதத்தினர் அப்படியே இரண்டாவது டெஸ்டிலும் இருக்கின்றனர். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் உத்தேச இந்தியா அணி விபரம் கீழே உள்ளது.

ரோகித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே எஸ் பரத், ஜடேஜா அக்சர் பட்டேல், அஸ்வின், சிராஜ், சமி.