“இங்கிலாந்து ஆண்டர்சனை விட இந்தியாவின் ஜாகீர் கான்தான் பெட்டர் பவுலர்” – இஷாந்த் சர்மா அதிரடி கருத்து!

0
169
Zaheer

இந்திய கிரிக்கெட்டில் வேகப்பந்துவீச்ச துறையில் மிக மிக முக்கியமான பந்துவீச்சாளர் இடது கை வேகப் பந்துவீச்சாளர் ஜாகிர் கான் ஆவார்.

இவர் ஓய்வு பெற்றதற்குப் பிறகு இன்று வரையில் ஒரு சரியான இடது கை வேகம் பந்துவீச்சாளர் இந்திய அணிக்கு கிடைக்கவில்லை என்பது இதில் மிகவும் முக்கியமான விஷயம்!

- Advertisement -

தற்பொழுது இவருடைய ஜூனியரான வலது கை வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா ஜாகிர் கான் பற்றி சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். மேலும் ஒரு முக்கிய சர்ச்சையான விஷயத்தைப் பற்றியும் பேசி இருக்கிறார்.

இஷாந்த் சர்மா பேசும்பொழுது
“ஜிம்மி ஆண்டர்சன் பந்துவீச்சு பாணி மற்றும் அவர் பந்து வீசும் முறை முற்றிலும் வேறுபட்டது. அவர் இங்கிலாந்தில் வேறான ஒரு சூழ்நிலையில் விளையாடுகிறார். அவர் இந்தியாவில் விளையாடுவதாக இருந்தால் அவரை விட ஜாகீர் கான் மிகவும் பெட்டரான பவுலர்” என்று தெரிவித்திருக்கிறார்.

40 வயது தாண்டியும் இன்றும் வேகப் பந்துவீச்சாளராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் ஆண்டர்சன் இந்தியாவில் 13 டெஸ்ட் போட்டிகளில் 29.32 சராசரியில் 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால் இங்கிலாந்தில் ஜாகீர் கான் எட்டு டெஸ்ட் போட்டிகளில் 27.96 சராசரியில் 31 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதில் ஒரு ஐந்து விக்கெட்டும் அடக்கம். ஆண்டர்சன் இந்தியாவில் ஐந்து விக்கெட் எடுத்ததில்லை.

- Advertisement -

மேலும் 2014 நியூசிலாந்தில் மெக்கலம் கேட்ச்சை ஜாகிர் கான் தவறவிட்ட பொழுது இஷாந்த் சர்மா அவரை திட்டியதாக இன்றுவரை ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது இந்தச் சம்பவம் குறித்து அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“அப்பொழுது நான் கூறிய வார்த்தை என்னைக் குறித்து நானே கூறிக் கொண்டது. ஆனால் இதுவரையில் மக்களுக்கு அது புரியாமல் தவறாகவே நினைத்திருக்கிறார்கள். நான் யார் கேட்ச்சை தவறவிட்டாலும் திட்டியது கிடையாது. ஜாகீர் கான் என்னுடைய குரு போன்றவர். அவரை எப்படி நான் திட்டுவேன்?!

பிரண்டன் மெக்கலம் அதிக ரன்கள் எடுத்ததால் விரக்தி ஏற்பட்டது. நான் ஜாகீர் மற்றும் சமி மூன்று பேர் மட்டுமே வேகப்பந்துவீச்சாளர்களாக இருந்தோம். ஒவ்வொரு நான்கு ஓவர்களுக்கு ஒரு முறையும் நாங்கள் பந்து வீச வேண்டியதாக இருந்தது. ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் வசதியாக இருந்தது. இந்த நேரத்தில் எனக்கு உண்டான விரக்தியைத்தான் நான் வெளிப்படுத்தினேன்!” என்று கூறியிருக்கிறார்!