இந்திய அணிக்காக உலகக் கோப்பையில் ஆடப்போகும் வீரர்கள்!-20 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது’ பிசிசிஐ’

0
2406

இந்திய கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை டி20 தோல்வி,வீரர்களின் காயம் மற்றும் உடற்தகுதி தொடர்பான விஷயங்களும் எதிர்காலத் திட்டங்களும் குறித்து ஆலோசனை செய்ய பிசிசிஐ புதிய தலைவர் ரோஜர் பின்னி தலைமையில் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைமை பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் வீரர்களின் உடற்தகுதி தொடர்பாக அவர்கள் பணிச்சுமையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது மேலும் யோயோ பரிசோதனையுடன் டெக்சா என்ற புதிய பரிசோதனையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் வீரர்கள் எளிதில் காயம் அடைவது தடுக்கப்படும் மேலும் ஒரு வீரர் குறைந்தபட்ச காயத்துடன் விளையாடுவதும் தவிர்க்கப்படுவதால் அணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் 100% உடல் தகுதியுடன் இருப்பார்கள் .

- Advertisement -

மேலும் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவாக 50 ஓவர் உலகக் கோப்பையில் ஆடக்கூடிய 20 வீரர்களை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தேர்வு செய்துள்ளது . இந்த வீரர்களுக்கு நடக்கவிருக்கும் போட்டிகளில் அதிகமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு அதிலிருந்து சிறந்த 15 வீரர்களைக் கொண்ட அணி உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக அறிவிக்கப்படும்.

கடந்த 2021 மற்றும் 2022 ஆகிய இரண்டு டி20 உலக கோப்பைகளிலும் இந்திய அணியின் தீர்வு குறித்து சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழுந்தன . உலக கோப்பையில் எந்தெந்த வீரர்கள் ஆட போகிறார்கள் என்ற ஒரு தெளிவான முடிவு அணி நிர்வாகத்திடம் இல்லாதது இந்தியாவின் தோல்விக்கு காரணமாக பேசப்பட்டது . இதனால் உலகக்கோப்பை தொடங்குவதற்கு 10 மாதங்களுக்கு முன்பாகவே நிலையான ஒரு அணியை தேர்ந்தெடுத்து அதில் இருக்கக்கூடிய வீரர்களுக்கு குறிப்பிட்ட அளவு வாய்ப்புகளையும் வழங்கி அதிலிருந்து சிறந்த வீரர்களைக் கொண்ட அணியை தேர்ந்தெடுக்க முடிவு செய்து இருக்கிறது இந்திய அணி .

இந்த அணியில் கேப்டன் ரோஹித் சர்மா விராட் கோலி ,சூரியகுமார் யாதவ் ஸ்ரேயாஸ் ஐயர்,கேஎல் ராகுல் ,ஹர்திக் பாண்டியா ,ரவீந்திர ஜடேஜா பும்ரா,முகம்மது சமி, புவனேஸ்வர் குமார் , ரிஷப் பண்ட், சஹால், குல்தீப்,யாதவ்,சஞ்சு சாம்சன்,இஷான் கிஷான்,சுப்மன் கில் , வாஷிங்டன் சுந்தர்,முகமது சிராஜ்,அர்ஷ்தீப் சிங் மற்றும் உம்ரன் மாலிக் ஆகிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

இந்த அணியானது சம அளவில் இளம் வீரர்களையும் மற்றும் அனுபவ வீரர்களையும் கொண்டுள்ளது. ஆல் ரவுண்டர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் என சம அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது . சமீப காலங்களில் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடிவரும் சஞ்சு சாம்சன்,இசான் கிசான் சுப்மன் கில்,வாஷிங்டன் சுந்தர் உம்ரன் மாலிக்,முகமது சிராஜ் போன்ற இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது .

இந்திய அணியின் மூத்த வீரர்களான தவான் மற்றும் அஸ்வின் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் . கடந்த காலங்களில் தவானுக்கு அதிகமான வாய்ப்புகள் கொடுக்கப்படும் அவர் சரியாக ஆடாததால் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் . கடந்த காலங்களில் ரவீந்திர ஜடேஜாவுக்கு மாற்று வீரராக விளையாடி வந்த அக்ஸர் பட்டேலும் நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சர்துல் தாக்கூர் தீபக் சகர் போன்ற வீரர்களும் பரிசீலிக்கப்படவில்லை.