இந்திய கிரிக்கெட்

தெ.ஆ டெஸ்ட் தொடர்.. இந்திய அணி அறிவிப்பு.. திரும்பிய ஸ்டார் வீரர்.. ஷமிக்கு தொடர் சோகம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி சொந்த மண்ணில் விளையாட இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு தற்பொழுது 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

தற்போது உலக டெஸ்ட் சாம்பியன் ஆக இருக்கும் தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு ஒன்று என சமன் செய்துவிட்டு இந்தியா வருகிறது. மேலும் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்வதற்கு இந்திய அணி சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

திரும்பி வந்த வீரர்

இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நவம்பர் 14ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 22ஆம் தேதி அசாம் கவுகாதி மைதானத்திலும் துவங்குகிறது.

இந்த டெஸ்ட் தொடருக்கு இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து மீண்டும் திரும்பி வந்திருக்கிறார். மேலும் 10 ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் விளையாட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

முகமது ஷமிக்கு வாய்ப்பு மறுப்பு

மேலும் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த அணியில் முகமது ஷமிக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ரஞ்சி தொடரில் சிறப்பாக செயல்பட்டு இருந்த பொழுதும் அவருக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.

அதே சமயத்தில் பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு அவருடைய இடத்திற்கு காயத்தில் இருந்த ஆகாஷ் தீப் கொண்டுவரப்பட்டிருக்கிறார். சுழல் பந்துவீச்சாளர்களாக குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா தொடர்கிறார்கள்.

இதையும் படிங்க : தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான தொடர்.. கோலி, ரோகித் பங்கேற்பார்களா? தேர்வுக்குழு முக்கிய முடிவு

இந்திய அணி: சுப்மன் கில் (சி), ரிஷப் பந்த் (விகீ) (துகே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் பாடிக்கல், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, சிராஜ், குல்தீப் யாதவ் மற்றும் ஆகாஷ் தீப்.

- Advertisement -
Published by