இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது டி20 தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது.
இந்தியா இங்கிலாந்து டி20 தொடர்
இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி முடித்த நிலையில் அடுத்ததாக வருகிற ஜனவரி 22ஆம் தேதி முதல் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த நிலையில் தற்போது சூரியகுமார் தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. சூரியகுமார் தலைமையில் விளையாட உள்ள இந்திய அணிக்கு அக்சார் பட்டேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மேலும் கடந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் அபாரமாக விளையாடிய சஞ்சு சாம்சன் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவரோடு அபிஷேக் ஷர்மா மற்றும் திலக் வர்மா கூட்டணி டாப் ஆர்டர் பேட்டிங் வரிசையை வலுப்படுத்துகிறார்கள். அவர்களோடு இந்திய அணியின் பிரிமியர் ஆல்ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் அக்சார் பட்டேல் மற்றும் நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் துறையில் பலம் சேர்க்கிறார்கள்.
முகமது சமி கம்பேக்
இவர்களோடு ரிங்கு சிங் பேட்டிங் துறையில் பலம் சேர்க்கிறார். பந்துவீச்சை பொறுத்தவரை பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி ஆகியோர் வலு சேர்க்கின்றனர். இதில் முகமது ஷமி கடந்த 200023 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய அணியில் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய் ஆகியோர் சுழல் துறையில் இருக்கிறார்கள். விக்கெட் கீப்பர் பட்டியலில் ரிஷப் பண்டுக்கு பதிலாக துருவ் ஜூரேல் சேர்க்கப்பட்டிருக்கிறார். மேலும் கில் டி20 அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:10 போர் 6 சிக்ஸ் 97 ரன்.. பிரிட்டோரியஸ் அதிரடி ஆட்டம்.. 8 பந்துகளில் தினேஷ் கார்த்திக் அணி வெற்றி.. எஸ்ஏடி20
இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய டி20 அணி :சூர்யகுமார் யாதவ் (C), சஞ்சு சாம்சன் (WK), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல் (விசி), ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய் , வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல்.