10 வருஷமா கோப்பைல கை வைக்கல .. அந்த 2 சம்பவம் நினைவிருக்கா? – பாண்டிங்க்கு ரவி சாஸ்திரி பதிலடி

0
394
Ravi

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் நேற்று பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் பற்றி பேசி, திடீரென அந்தத் தொடர் குறித்தான ஒரு பரபரப்பை உண்டாக்கி விட்டார். இந்த நிலையில் ரிக்கி பாண்டிங் கருத்துக்கு பதிலடி தரும் விதமாக இந்திய முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணி கடந்த இரண்டு முறையாக ஆஸ்திரேலிய டெஸ்ட் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறது. சொந்த நாட்டில் அதுவும் டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு எதிராகப் பெற்ற இரண்டு தொடர் தோல்விகள் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை கவலை அடைய செய்திருக்கிறது. இதன் காரணமாக வெற்றி பெறுவதற்கு எல்லா வழிகளிலும் முயற்சி செய்து வருகிறார்கள்.

- Advertisement -

மேலும் கடந்த ஐந்து முறையாக சுமார் பத்து வருடங்களாக இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றவில்லை. தொடர்ந்து இந்த கோப்பையை இந்திய அணியை ஒரு தசாப்த காலமாக தன் வசம் வைத்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வருகின்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை மூன்றுக்கு ஒன்று என ஆஸ்திரேலிய கைப்பற்றும் என ரிக்கி பாண்டிங் கூறியிருந்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர்களது நாட்டில் இரண்டு முறை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்ற பொழுது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி இதற்கு பதிலடி தரும் விதமாகப் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறும்பொழுது “நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், கடந்த இரண்டு டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர்களது நாட்டில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று இருக்கிறது. கிட்டத்தட்ட 10 வருடங்களாக ஒரு தசாப்தமாக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி மீது ஆஸ்திரேலியா அணி கை வைக்கவில்லை.

இதையும் படிங்க : ஆஸி தைரியமிருந்தா இந்திய அணிக்கு எதிரா.. இந்த 2 விஷயத்தை செய்யுங்க – பாகிஸ்தான் பசித் அலி சவால்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிச்சயம் திருப்பிக் கொடுப்பதற்கு முயற்சி செய்யும். இந்தத் தொடர் ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் இடையிலான போட்டியாகவே அமையும். அதே சமயத்தில் இந்திய பந்துவீச்சு செயல்பாடு அனைவரும் பார்க்க காத்திருக்கும் ஆவல் ஏற்படுத்தும் ஒன்றாகவும் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -