ODI ரேங்கிங்.. 29 மாதம்.. கோலியை முந்திய ரோகித்.. பாபர் அசாம் நம்பர் 1 இடத்துக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

0
787

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்போது ஐசிசி ஒரு நாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சுமார் 29 மாதங்கள் கழித்து மீண்டும் முதல் மூன்று இடங்களுக்குள் வந்திருக்கிறார்.

மேலும் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோரும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு தர வரிசையில் குறிப்பிடத்தக்க இடங்களில் முன்னேறி இருக்கின்றனர்.

- Advertisement -

இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரோஹித் சர்மா கடைசியாக 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பையில் பங்கு பெற்றார். அதற்குப் பிறகு பல மாதங்கள் கழித்து தற்போது இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கேப்டனாக செயல்பட்டு பேட்டிங்கிலும் அதிரடியான தொடக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இரண்டு போட்டிகளையும் சேர்த்து ரோகித் சர்மா 122 ரன்கள் குவித்து 134 பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 763 ரேட்டிங் புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் மீண்டும் மூன்று இடங்களுக்குள் முன்னேறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இரண்டாவது இடத்தில் இந்திய அணியின் இளம் வீரரான துணை கேப்டன் சுப்மான் கில் 782 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இலங்கை அணிக்கு எதிரான கடந்த இரண்டு போட்டிகளில் சுமாரான பேட்டிங் பங்களிப்பை வெளிப்படுத்தி வந்தாலும் இரண்டாவது இடத்திலே தொடர்ந்து நீடிக்கிறார் என்பதும் குறிப்பிடப்பட்டது. முதல் இடத்தில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன பாபர் அசாம் ரோஹித் சர்மா விட 61 புள்ளிகள் அதிகமாக பெற்று 824 புள்ளிகள் உடன் முதலிடத்தில் இருக்கிறார். இந்த தரவரிசையில் விராட் கோலி நான்காம் இடத்தில் இருக்கிறார். ரோகித் சர்மா மிக வேகமாக முன்னேறி வருவதால் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பாபர் அசாமுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே மூன்றாவது இடத்தில் இருந்த விராட் கோலியை தற்போது ரோகித் சர்மா மூன்றாம் இடத்திற்கு முன்னேறி இடமாற்றம் செய்திருக்கிறார். இலங்கைத் தொடரில் சிறப்பாக பேட்டிங்கில் செயல்பட்டு வரும் அக்சார் பட்டேல் 35 இடங்கள் முன்னேறி 178-வது இடத்திலும் முன்னேறி இருக்கிறார். அதேபோல ஒரு நாள் போட்டி தொடரில் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் குல்தீப் யாதவ் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் 662 புள்ளிகள் உடன் ஐந்து இடங்கள் முன்னேறி நான்காவது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

இதையும் படிங்க:3வது போட்டி.. கம்பீர் போட்ட மாஸ்டர் பிளான்.. ஜெயசூர்யா வைத்த வேற லெவல் செக்.. 27 வருட வரலாறு மாறுகிறதா?

அதேபோல இந்தியாவின் முகமது சிராஜ் 662 புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சாளரான கேசவ் மகராஜ் 716 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா வீரர்களானா ஹெசில்வுட் 688 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும், ஆடம் ஜம்பா 686 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்தில் இருக்கின்றனர்.

- Advertisement -