இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான முக்கியமான மூன்றாவது போட்டி இன்று கொழும்பு பிரேமதாசா அமைத்தானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே இந்திய அணி தொடரை சமன் செய்ய முடியும் என்கின்ற அழுத்தத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் அதிர்ஷ்ட காற்று இலங்கை பக்கமே அடித்திருக்கிறது. மேலும் இலங்கை அணி தரப்பில் ஒரு முக்கிய மாற்றத்தை செய்து சரியான செக் வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் இன்றைய போட்டிக்கான டாசிலும் இலங்கை கேப்டன் சரித் ஆசலங்கா வெற்றி பெற்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இலங்கை அணியில் இந்த போட்டியில் அகில தனஞ்செயா நீக்கப்பட்டு அவருடைய இடத்தில் சுழல் பந்துவீச்சாளர் தீக்ஷனா கொண்டுவரப்பட்டிருக்கிறார். இதன் மூலம் அவர்களுக்கு பவர் பிளேவில் பந்து வீச ஒரு கூடுதல் சுழல் பந்துவீச்சாளர் கிடைத்திருக்கிறார். இதனால் இரண்டாம் பகுதியில் அவர்களால் கடும் நெருக்கடி இந்திய அணிக்கு கொடுக்க முடியும்.
இந்திய அணியின் தரப்பில் எதிர்பார்த்தது போலவே ரியான் பராக் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் உள்ளே வந்திருக்கிறார்கள். ரியான் பராக் இந்திய ஒருநாள் அணியில் முதன்முறையாக அறிமுகமாகிறார். அதே சமயத்தில் கேஎல்.ராகுல் மற்றும் அர்ஸ்தீப் சிங் இருவரும் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த போட்டியில் இந்திய அணி இரண்டு சிறந்த மாற்றங்களை செய்து சவால் கொடுத்திருப்பது போலவே, இலங்கை அணியும் கூடுதல் பேட்ஸ்மேனை நீக்கி சுழல் பந்துவீச்சாளரை கொண்டு வந்திருக்கிறது. மேலும் தீக்ஷனா பவர் பிளேவில் பந்து வீசுவார். அத்தோடு இரண்டாம் பகுதியில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான நிலையில் அவர் நல்ல தாக்கத்தை கொடுக்க முடியும். இந்த வகையில் இலங்கை பெரிய செக் வைத்திருக்கிறது.
டாஸ் நிகழ்வுக்கு பிறகு பேசிய ரோஹித் சர்மா கூறும்பொழுது ” கடந்த இரண்டு போட்டிகள் எங்களுக்கு பெரிய சவாலாக இருந்தது. பேட் மற்றும் பந்துவீச்சில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தெளிவாக இருக்கிறது. இது குறித்து நாங்கள் அணியினருக்கு தெளிவாக கூறியிருக்கிறோம். அதே சமயத்தில் நீங்கள் இலங்கை அணிக்கு கிரெடிட் கொடுக்க வேண்டும். அவர்கள் நன்றாக விளையாடி கண்டிஷனையும் நன்றாக புரிந்து இருந்தார்கள். எங்களுக்கு எல்லாவற்றையும் சரி செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : தென் ஆப்பிரிக்கா டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவனை வெளியிட்டது.. இளம் வீரர் அறிமுகம்.. நட்சத்திர வீரர் வருகை
இரண்டு அணிகளும் சரிசமமான மாற்றங்களை செய்தாலும் கூட, இலங்கை அணி இரண்டாவதாக பந்து வீச இருப்பது அவர்களுக்கு கூடுதல் சாதகத்தை கொடுக்கிறது. எனவே 27 வருடங்கள் கழித்து இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றுவதற்கு தற்பொழுது சாதகமான நிலையில் இலங்கை அணி இருப்பது குறிப்பிடத்தக்கது.






