நாளை இந்திய உத்தேச பிளேயிங் XI.. 2 மாற்றம் நடக்குமா?.. ரோகித் ட்விஸ்ட் வைப்பாரா?

0
277
Rohit

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி நாளை மறுநாள் இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் நடக்க இருக்கிறது.

இந்திய அணி இதுவரை நடைபெற்ற நான்கு போட்டிகளில் ஒன்றை தோற்று மூன்றில் வென்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம் பெறுவதற்கான கடுமையான நெருக்கடி இருப்பதால், கடைசிப் போட்டியையும் மிகத் தீவிரமாகவே அணுகும்.

- Advertisement -

கடைசி போட்டி நடைபெறும் இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தின் சூழ்நிலை மிகவும் குளிராக காணப்படும். இங்கு வேகப்பந்து வீச்சுக்கு கொஞ்சம் உதவிகள் கிடைத்தால் கூட சுழற் பந்து வீச்சும் நல்ல முறையில் எடுபடும்.

இங்கு 2017 ஆம் ஆண்டு இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமே நடைபெற்று இருக்கிறது. அதில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய சுழல் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது.

- Advertisement -

அதே சமயத்தில் இன்று நடைபெற்ற ரஞ்சி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை எடுத்துப் பார்த்தால் சுழல் பந்து மற்றும் வேகப்பந்து வீச்சு என இரண்டுமே சரிசமமான அளவில் விக்கெட்டுகளை பெற்றிருக்கிறது.

எனவே இந்தியா மூன்று வேகப்பந்துவீச்சாளர்களுடன் செல்லுமா? இல்லை வழக்கம் போல் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் செல்லுமா? என்பதுதான் முக்கிய கேள்வியாக இருக்கிறது.

மேலும் இந்தத் தொடரில் மூன்று போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கப்பட்ட அறிமுக வீரராக வந்த ரஜத் பட்டிதார் வாய்ப்புகளை வீணடித்து இருக்கிறார். எனவே அவரது இடத்தில் தேவ்தத் படிக்கல் அறிமுகப்படுத்தப்படுவாரா? என எதிர்பார்ப்பு இருக்கிறது.

பல முன்னாள் வீரர்களும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் வெற்றி கூட்டணியை மாற்ற மாட்டார்கள் என்று கூறி வருகிறார்கள். மேலும் இந்த ஜோடி யாருக்கு வாய்ப்பு கொடுத்தாலும் அவர்களை கடைசி வரை கைவிடாமல் இருப்பதை தங்களுடைய பாணியாக வைத்திருக்கிறது என்றும், இதனால் கடைசி போட்டியிலும் ரஜத் பட்டிதாருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்றும் முன்னாள் வீரர்கள் தங்கள் கணிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த வகையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய அணியில் இருந்து வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் மற்றும் நீக்கப்பட்டு, அவருடைய இடத்தில் ஓய்வில் இருந்து திரும்ப வந்திருக்கும் பும்ரா விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :

ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, சுப்மன் கில், ரஜத் பட்டிதார், சர்ப்ராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜுரல், ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ்.

- Advertisement -