ஆஸி கேப்டன் பேச்சுக்கு.. நாளை பழி தீர்க்குமா இந்திய அணி?.. உத்தேச பிளையிங் லெவன்.. 1 மாற்றம் அவசியம்

0
1015
ICT

நாளை டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் மிக முக்கியமான போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவது உறுதி. அதே சமயத்தில் 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றால், இந்தியாவுக்கும் அரையிறுதியில் சிக்கல் உண்டாகும்.

இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்த காரணத்தினால், நாளை இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. மேலும் இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற தாங்களே மிகச் சிறந்தவர்கள் என ஆஸ்திரேலியா கேப்டன் மிட்சல் மார்ஸ் பேசியது பரபரப்பாகி வருகிறது.

- Advertisement -

இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளையும் வென்று இருக்கின்ற காரணத்தினால், நாளை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுத்தால், அரையிறுதி போட்டியில் சிரமம் இல்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் அணியிடம் தோற்று எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.

மேலும் ஆஸ்திரேலியா அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் இருவருமே இடது கை பேட்ஸ்மேன்கள். எனவே ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் என இருவரையும் பவர் பிளேவில் கொண்டு வருவது கடினம். மேலும் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் பவர் பிளே தாண்டி நின்றாலும், மேற்கொண்டு ரவீந்திர ஜடேஜாவை பந்து வீச வைப்பதும் கடினம். கட்டாயம் குல்தீப் யாதவ் தொடர்ந்து வைக்க வேண்டியதாக இருக்கும்.

எனவே இந்தக் காரணத்திற்காக பேட்டிங் வரிசையை ஏழு வரையில் அமைத்துக் கொண்டு, ரவீந்திர ஜடேஜா அல்லது அக்சர் படேல் இருவரை ஒருவரை வெளியில் வைத்து, பவர் பிளேவில் பந்து வீசக்கூடிய முகமது சிராஜை கொண்டு வர வேண்டிய அவசியம் முக்கியமாக இருக்கிறது. சிராஜ் பவர் பிளேவில் பந்து வீசினால், பும்ராவை பவர் பிளே தாண்டி மூன்று ஓவர்கள் மீதம் வைத்து தேவைப்படும் நேரத்தில் வீச வைக்கலாம். எனவே இந்த மாற்றம் அவசியமாக இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : இதெல்லாம் எங்களுக்கு பழக்கமே இல்லை.. ஆனா முதல்ல பேட்டிங் பண்றப்போ இதை ஏத்துகிட்டுதான் ஆகணும்- அஸ்வின் கருத்து

நாளை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :

ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், சூரியகுமார், யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஸ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ்.