நெதர்லாந்தை தட்டித்தூக்க களமிறங்கும் இந்திய அணி அறிவிப்பு; மூத்த வீரர்களுக்கு ஓய்வா? – ரோகித் போட்ட பக்கா பிளான்!

0
311

நெதர்லாந்து அணிக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச பிளேயிங்-லெவன் இங்கே கணிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடர் தற்போது சூப்பர் 12 சுற்றை எட்டியுள்ளது. தகுதி சுற்று முடிவடைந்து நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொண்டு நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றியை பெற்றது.

- Advertisement -

அவருக்கு அடுத்ததாக தனது இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. இப்போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக இந்திய வீரர்கள் அக்டோபர் 25ஆம் தேதி மைதானத்திற்கு வந்திறங்கி தங்களது பயிற்சியை துவங்கிவிட்டனர்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய போட்டிக்கு பிறகு, ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சற்று உடல் அளவில் அசவுகரியமாக இருக்கிறார் என்று தகவல்கள் வந்தது. ஏனெனில் ஹர்திக் பாண்டியா உட்பட முகமது சமி, அர்ஷதிப் சிங், சூரியகுமார் யாதவ், புவனேஸ்வர் குமார் ஆகியோர் பயிற்சியை ஸ்கிப் செய்தனர்.

‘அனைவரும் தற்போது முழு உடல் தகுதியுடன் இருக்கிறார்கள். எந்தவித அசவுகரியமும் அவர்களுக்கு இல்லை.’ என்று தெரிவித்திருக்கிறார் பவுலிங் கோச்.

- Advertisement -

இருப்பினும் ரோகித் சர்மா, மூத்த வீரர்கள் முழு ஆரோக்கியத்துடனும் முழு கவனத்துடனும் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து சிந்தித்து வருகிறார். அந்த வகையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது, மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

அதிகபட்சமாக, ஹர்திக் பாண்டியாவை அமர வைத்துவிட்டு தீபக் ஹூடாவும், முகமது சமி அமர வைக்கப்பட்டு ஹர்ஷல் பட்டேல் உள்ளே எடுத்து வரப்படலாம் என்று தெரிகிறத.

இந்திய அணியின் உத்தேச பிளேயிங்-லெவன்:

ரோகித் சர்மா(கேப்டன்), கே எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், அக்சர் பட்டேல், அஸ்வின், ஹர்ஷல் பட்டேல், புவனேஸ்வர் குமார், அர்ஷதீப் சிங்