விராட் கோலி ரோஹித் சர்மா விஷயத்துல.. வரலாறே இதைத்தான் சொல்லுது.. ரொம்ப நாள் போகாது – இங்கி ஜேம்ஸ் வின்ஸ்

0
231

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது இந்திய அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாடி வரும் நிலையில் அதற்கு பிறகு மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இதில் ஒரு நாள் தொடரில் விளையாட உள்ள விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஜேம்ஸ் வின்ஸ் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி ரோஹித் சர்மா மோசமான ஃபார்ம்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களாக திகழும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா சமீப காலமாக மோசமான பேட்டிங் ஃபார்மில் தத்தளித்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சமீபத்தில் நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் என இரண்டிலும் தோல்வியடைந்து பேட்டிங்கிலும் படுமோசமாக செயல்பட்டனர்.

இந்த சூழ்நிலையில் இந்திய வீரர்கள் அதற்குப் பிறகு உள்நாட்டு கிரிக்கெட்டில் பயிற்சி பெற்று வரும் நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாட இருக்கின்றனர். சிவப்பு பந்து கிரிக்கெட்டில் மோசமாக விளையாடினாலும் வெள்ளை பந்து கிரிக்கெட் பொருத்தவரை இவர்களது பேட்டிங் ஃபார்ம் சிறப்பாகவே இருக்கிறது. இந்த சூழ்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாட வேண்டும் என்கிற பசி உண்மையில் அவர்களுக்கு இருந்தால் அவர்களை வரலாறே நிச்சயம் திரும்ப சிறப்பாக மாற்றும் என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

வரலாறு இதைத்தான் கூறுகிறது

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “கணிப்பது கடினம். ஏனென்றால் இங்கிலாந்து நிலைமைகள் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட சில நாட்களில் அது பேட்ஸ்மேன்கள் விளையாடுவதற்கும் சாதகமானதாக இருக்கும். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்றோரின் தரம் என்பது மறக்க முடியாது. அவர்கள் நிஜமாகவே டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று பசி அவர்களுக்குள் இருந்தால் அவர்கள் சிறப்பாக செயல்பட ஒரு வழியை கண்டுபிடிப்பார்கள் என வரலாறு கூறுகிறது.

இதையும் படிங்க:வில்லியம்சன் ஸ்டாய்னிஸ் போராட்டம் வீண்.. தினேஷ் கார்த்திக் அதிரடி.. 6 விக்கெட்டில் ராயல்ஸ் அணி வெற்றி.. எஸ்ஏ டி20

அத்தகைய திறமை கொண்ட வீரர்கள் நீண்ட காலமாக மோசமான ரன்கள் எடுத்து நாங்கள் பார்த்ததில்லை. ஆனால் இந்த சமயத்தில் அவர்களும் மனிதர்கள் தான் என்பதை காட்டுகிறது. அவர்கள் வெற்றி பெற உந்துதல் பெற்றால் அவர்கள் வலுவாக மீண்டும் திரும்ப வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று 33 வயதான ஜேம்ஸ் வின்ஸ் கூறி இருக்கிறார். இங்கிலாந்து ஒருநாள் தொடரின் விளையாடி முடித்தவுடன் இந்திய அணி அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -