இந்திய கிரிக்கெட்

ஆஸி கூக்கபுரா பந்தில் வேற ரோகித்தை பாப்பிங்க.. இப்படி ஒரு காரணம் இருக்கு – இந்திய முன்னாள் பீல்டிங் கோச் ஸ்ரீதர் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முடித்த பிறகு அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் தற்போது இந்த தொடருக்கு தயாராகி வருகின்றனர்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

மோசமான பேட்டிங் ஃபார்மில் ரோஹித் சர்மா

ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை குவித்து வரும் நிலையில், ஒரு பேட்ஸ்மேன் ஆக தொடர்ந்து டி20 உலக கோப்பைக்கு பிறகு தடுமாறி வருகிறார். இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பேட்ஸ்மேன் ஆக மோசமாக செயல்பட்டார். அதற்குப் பிறகு நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடி 42 ரன்கள் மட்டுமே குவித்தார்.

மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 91 ரன்கள் மட்டுமே குவித்திருக்கிறார்.மேலும் ஒரு கேப்டனாகவும் அவரது தலைமையில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மா தனது தவறுகளை விரைவாக சரி செய்வார் எனவும் ஆஸ்திரேலியா மைதானங்களில் இழந்த பேட்டிங் பார்மை மீட்டெடுப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

தனது தவறை விரைவில் சரி செய்வார் – பயிற்சியாளர் ஸ்ரீதர்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ரோஹித் சர்மா மீண்டும் பேட்டிங் குறித்த நுட்பங்களை மீண்டும் ஆராயப் போகிறார். மேலும் அவரது பேட்டிங் டெக்னிக்கை மேம்படுத்த கடினமாக உழைக்கப் போகிறார். ஆஸ்திரேலியாவில் அல்லது புதிய பந்திற்கு எதிராக அவர் முன்னர் விளையாடிய வீடியோக்களின் தொகுப்பை பார்த்து அதிலிருந்து குறிப்புகளைஎடுப்பார். குறிப்பாக டியூக்ஸ் அல்லது எஸ்ஜி பந்துகளை விட கூகபுரா பந்துகள் அவருக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்.

இதையும் படிங்க:ஐபிஎல் 2025 மெகா ஏலம்.. 1574 வீரர்கள்.. நடைபெறும் தேதி.. எத்தனை பேருக்கு இடம்.?. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

எனவே ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவில் எந்த போட்டியில் விளையாடினாலும் அல்லது விளையாட தயாராக இருக்கும்போது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். மேலும் கடந்த 2021ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது 15 நாட்கள் இடைவெளியில் ரோஹித் சர்மா தனது பேட்டிங் டெக்னிக்கை மேம்படுத்த கடினமாக உழைத்தார். பேட்டிங் மேல் கையை கடினமாக பிடித்து உடலோடு சேர்த்து பேட்டை ஒட்டி முடிந்த வரை நேராக விளையாட முயற்சித்தார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by