ஐபிஎல் 2025 மெகா ஏலம்.. 1574 வீரர்கள்.. நடைபெறும் தேதி.. எத்தனை பேருக்கு இடம்.?. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
626

18வது ஐபிஎல் சீசன் திருவிழா அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு ஐபிஎல் அணியும் சிறந்த வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கு பெற மொத்தமாக 1574 வீரர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். இதில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் அதிக வீரர்கள் பதிவு செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

1574 வீரர்கள் முன்பதிவு

இந்தியாவில் நடைபெறும் புகழ்பெற்ற டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு ஐபிஎல் அணியும் தங்களது விருப்பமான வீரர்களை தக்க வைத்துள்ள நிலையில் மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கு பெற முன்பதிவு செய்து இருக்கின்றனர். இதில் மொத்தமாக சேர்த்து 1574 வீரர்கள் முன்பதிவு செய்து இருக்கின்றனர். இதில் 1165 இந்திய வீரர்களும் 409 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். இதில் 1224 வீரர்கள் சர்வதேச அணியில் விளையாடாத வீரர்களாகவும் 320 வீரர்கள் சர்வதேச வீரர்களாகவும் இருக்கிறார்கள்.

இதில் 48 வீரர்கள் இந்தியர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.இதில் 274 சர்வதேச வீரர்கள், 152 அன்கேப்டு இந்திய வீரர்கள், இதற்கு முன் ஐபிஎல் தொடரில் விளையாடிய 3 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள், 965 அன்கேப்டு வீரர்கள் மற்றும் 104 சர்வதேச வீரர்களும் பதிவு செய்திருக்கிறார்கள். இதில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 91 வீரர்கள், ஆஸ்திரேலியாவை சேர்ந்த 76 வீரர்கள் ஐபிஎல்லில் பங்கேற்க முன்பதிவு செய்து இருக்கிறார்கள்.

- Advertisement -

குறைவாகவே நிரப்பப்பட உள்ள இடங்கள்

இதன் மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற இருக்கிறது. இதில் இங்கிலாந்து 52, நியூசிலாந்து 39, வெஸ்ட் இண்டீஸ் 33, ஆப்கானிஸ்தான் 29, இலங்கை 29, பங்களாதேஷ் 13, நெதர்லாந்து 12, அமெரிக்கா 10, அயர்லாந்து 9, ஜிம்பாப்வே 8, கனடா 4, ஸ்காட்லாந்து 2, இத்தாலி 1, துபாய் 1வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இவ்வளவு வீரர்கள் தங்களது பெயர்களை முன் பதிவு செய்திருக்கும் நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் மொத்தமாக 204 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 25 வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இதையும் படிங்க:விராட் ரோஹித்தை ஒரே நாள்ல ஜீரோ ஆக்காதீங்க.. கொஞ்சம் இதை மட்டும் யோசிச்சு பாருங்க – பசித் அலி கருத்து

இந்த ஏலத்தில் அதிகபட்சமாக பஞ்சாப் அணி 110 கோடி ரூபாயை தங்களது இருப்பில் வைத்திருக்கும் நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதற்கு அடுத்ததாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 83 கோடி தங்களது இருப்பில் வைத்திருக்கிறது. எனவே இந்த ஏலத்தில் எத்தனை வீரர்களை ஒவ்வொரு அணியும் வாங்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

- Advertisement -