இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக அடுத்த மாத மத்தியில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு முகமது ஷமி திரும்ப வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவரிடம் இந்திய தலைமை பயிற்சியாளர் கம்பீர் ஒரு முக்கிய விஷயம் குறித்து பேச வேண்டும் என முன்னாள் இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மஹாம்ப்ரே கூறியிருக்கிறார்.
கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் போது இந்திய அணிக்காக காலில் இருந்த காயத்திற்கு ஊசி போட்டுக் கொண்டு முகமது ஷமி விளையாடினார். இதன் காரணமாக அவருக்கு பெரிய அளவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அளவுக்கு காயம் பெரிதானது.
இந்த நிலையில் லண்டனில் அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்த அவர் தற்பொழுது சிறிது சிறிதாக பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். எனவே அடுத்து செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் முகமது ஷமிக்கு ராகுல் டிராவிட் பயிற்சி காலத்தில் இந்திய அணியின் பந்து வீச்சுக்கு பயிற்சியாளராக இருந்த பராஸ் மஹாம்ப்ரே நிறைய உதவிகள் செய்திருந்தார். மேலும் அவரிடம் தனிப்பட்ட திறமை இருக்கின்ற காரணத்தினால் தேவையில்லாத எந்த புதியதையும் அவரிடம் புகுத்தாமலும் இருந்தார். தற்போது அவர் புதிய பயிற்சியாளர் கம்பீர் ஷமியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து அவரிடம் பேச வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
இது குறித்து பராஸ் மஹாம்ப்ரே கூறும் பொழுது “முகமது ஷமியிடம், உங்கள் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து எது வரையில் பார்க்கிறீர்கள்? எந்த வடிவத்தில் விளையாட நினைக்கிறீர்கள்? மூன்று வடிவத்திலும் விளையாட முடியும் என்று நினைக்கிறீர்களா? என மிக நேர்மையான ஒரு உரையாடலை நடத்த வேண்டும்.
இதையும் படிங்க : கோலி ரோகித் இல்லை.. இந்த 5 இந்திய பசங்க பிட்டா இருந்தா.. ஆஸில ஹாட்ரிக் வெற்றி சம்பவம் உறுதி – வாசிம் ஜாபர் கணிப்பு
நீங்கள் சில சமயங்களில் அவரிடம் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். அவர் மனதில் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் விளையாடலாம் என்று தோன்றும், இல்லை அவர் மூன்று வடிவத்திலும் விளையாடலாம் என்றும் நினைக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் நீங்கள் எதார்த்தமான எது சரியான முடிவோ அதை எடுக்க வேண்டும். அவர் அணிக்கு எவ்வளவு பயன் உள்ளவர்? அவர் இன்னும் எத்தனை காலம் விளையாட முடியும்? என்பது குறித்து பேச்சு வார்த்தைகள் நடக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






