இந்திய கிரிக்கெட்

எங்களுக்கு பதட்டம் பயம் எல்லாம் இருக்கு.. கடந்த ரெண்டு வருஷத்துல இது ரொம்ப மோசமான தோல்வி – இந்திய பேட்டிங் கோச் வருத்தம்

இந்திய பேட்டிங் பயிற்சியாளர் கடந்த இரண்டு வருடங்களில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டி தங்களுக்கு மிகவும் மோசமான போட்டியாக அமைந்து விட்டதாக வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் எல்லா வீரர்களுக்குமே பதட்டம் பயம் எல்லாம் இரவில் தூங்க செல்லும் பொழுது இருக்கும், ஆனால் அதைத் தாண்டி ஒவ்வொரு வீரர்களும் வெளியில் வந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

மோசமாக அமைந்துவிட்டது

இந்திய டி20 அணி 2024 டி20 உலகக் கோப்பை பிறகு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்திருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையே ஆன டி20 தொடர்கள் அனைத்தையும் வென்று இருக்கிறது. ஆனால் உலக கோப்பையில் எதிர்பாராத சரிவு உருவாகி இருக்கிறது.

இது குறித்து இந்திய பேட்டிங் பயிற்சியாளர் பேசும் பொழுது “இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்களில் நாங்கள் மிகவும் சிறப்பாக இருந்து வந்தோம். கடந்த இரண்டு வருடங்களில் எங்களுக்கு மிக மோசமான போட்டியாக தென் ஆப்பிரிக்க போட்டி அமைந்துவிட்டது. எங்கள் தொடக்க வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் இதைப் பற்றி மன அழுத்தம் ஏற்படுத்திக் கொண்டு கவலைப்பட வேண்டியதில்லை”

- Advertisement -

பயம் பதட்டம் இருக்கும்

“நாங்கள் கருப்பு மண் ஆடுகளங்களில் சிரமப்படுவது கிடையாது. ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருந்தால் பேட்டிங் சிரமம் ஆகிவிடும். ஒரு கொலாப்ஸ் நடந்தால் அதற்காக நாம் ஆடுகளத்தை குறை சொல்ல முடியாது. ஆரம்பத்தில் விக்கெட்டுகள் விழுந்தால் பந்து எப்படி நகர்கிறது என்று பார்த்து விளையாட வேண்டும்”

இதையும் படிங்க: சூரியகுமார் விஷயத்தில் இந்தியா முட்டாள்தனத்தை செய்யக்கூடாது.. இப்படித்தான் ஆடி ஆகணும் வழி இல்ல – மைக்கேல் வாகன் பேச்சு

“நீங்கள் படுக்கைக்கு செல்லும் பொழுது அழுத்தம் இருக்கும். எப்பொழுதும் ஒரு பதட்டம் இருக்கும். ஆனால் இதை எப்படி சமாளிப்பது என்று தொழில்முறை வீரராக நீங்கள் கற்றுக் கொள்கிறீர்கள். நாம் உலக கோப்பையை வெல்ல விரும்பினால் அழுத்தத்தை எப்படி கையாள்வது என்று கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts