கேஎல் ராகுலுக்கு பதிலாக ரிஷப் பண்ட் உள்ளே வருகிறாரா? – பேட்டிங் கோச் பேட்டி!

0
314

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுலுக்கு பதிலாக ரிஷப் பண்ட் உள்ளே எடுத்து வரப்படுவாரா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார் விக்ரம் ரத்தோர்.

- Advertisement -

நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் பேட்டிங் குறை கூற முடியாத அளவிற்கு சிறப்பாகவே இருக்கிறது. இந்திய அணிக்கு ஒரே ஒரு குறையாக இருப்பது நல்லது துவக்கம் அமையவில்லை என்பதுதான்.

குறிப்பாக துவக்க வீரர் கே எல் ராகுலின் ஃபார்ம் தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக நான்கு ரன்களில் ஆட்டம் இழந்தார். நெதர்லாந்து அணிக்கு எதிராக 9 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தபோது, எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். அதை ரிவ்யூ செய்திருந்தால் ராகுலுக்கு சாதகமாக அமைந்திருக்கும். ஆனால் துரதிஷ்டவசமாக ரிவ்யூ செய்யவில்லை.

கடந்த 2021 ஆம் ஆண்டு கேஎல் ராகுல் விளையாடியதை ஒப்பிடுகையில், அவரது சராசரி 44.12இல் இருந்து 28.19ஆக குறைந்திருக்கிறது. இவரது ஸ்ட்ரைக் ரேட் 144.92இல் இருந்து 128.21ஆக குறைந்திருக்கிறது. தொடர்ச்சியாக சரிவை சந்தித்து வருவதால் இவருக்கு உலகக்கோப்பையில் ஓரிரு போட்டிகள் ஓய்வு கொடுக்கப்பட்டு, பார்மை கொண்டுவர நேரம் கொடுக்கப்படுமா? என்றும் சந்தேகம் எழுந்திருக்கிறது.

- Advertisement -

மேலும் பயிற்சி ஆட்டத்தில் ரிஷப் பன்ட் துவக்க வீரராக விளையாட வைக்கப்பட்டார். இந்த யுக்தியை தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியின் போது இந்தியா பயன்படுத்துமா? கேஎல் ராகுலுக்கு பதிலாக ரிஷப் பன்ட் உள்ளே வர வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் இந்திய அணியின் பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோர்.

“எங்களுக்கு கே.எல் ராகுல் வெளியில் அமர்த்தும் என்னும் தற்போது வரை இல்லை. இரண்டு போட்டிகளை மட்டும் வைத்து கேஎல் ராகுல் போன்ற வீரரை எடைபோட முடியாது. பயிற்சி ஆட்டங்களில் அவர் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்திருக்கிறார். ஆகையால் அணியில் மாற்றம் கொண்டு வர எந்த ஒரு முடிவும் தற்போது வரை இல்லை.

இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலையில் தெளிவாக இருக்கிறார். எந்த நேரம் வேண்டுமானாலும் மீண்டும் பார்மிற்கு திரும்புவார். ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தால் கேஎல் ராகுலின் ஆக்ரோஷமான ஆட்டத்தை எந்த நேரம் வேண்டுமானாலும் நாம் பார்க்க முடியும்.” என்று மிகுந்த நம்பிக்கையுடன் விக்ரம் ரத்தோர் தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியம். இதில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும் என்பதால் கூடுதல் கவனம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது