எங்க டீம்ல இவங்க அந்த வேலைய செய்யணும்.. நாங்க உள்நாட்டு கிரிக்கெட்லயே இதுல கில்லிதான் – வாஷிங்டன் சுந்தர் கருத்து

0
137
Sundar

இந்திய அணி மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்கின்ற நிலையில், இந்திய அணியின் அணுகுமுறை குறித்து இந்திய அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் பேசியிருக்கிறார்.

இந்தத் தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் குறிப்பாக மிடில் ஆர்டர்கள் மிகவும் சுமாராக விளையாடுகிறார்கள். மிடில் ஆர்டர்களின் பேட்டிங் தோல்வி இந்திய அணியை இந்தத் தொடரை வெல்லும் வாய்ப்பிலிருந்து வெளியேற்றி இருக்கிறது. எனவே தொடரை சமன் செய்ய வேண்டுமென்றால் இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டாக வேண்டும்.

- Advertisement -

இந்த நிலையில் சுழல் பந்துவீச்சிக்கு எதிராக தங்கள் அணி வீரர்கள் எப்படி விளையாட கூடியவர்கள் என்றும், மேற்கொண்டு பெரிய தொடர்கள் இருக்கும் நிலையில் இந்த தொடரை அதற்கான ஒத்திகையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், தமிழகம் மற்றும் இந்திய அணிக்காக விளையாடும் வாஷிங்டன் சுந்தர் கூறியிருக்கிறார்.

இது குறித்து வாஷிங்டன் சுந்தர் கூறும் பொழுது “நாங்கள் சுழல் பந்துவீச்சுக்கு எதிராக எப்பொழுதும் சிறப்பாக விளையாட கூடியவர்கள். நாங்கள் இதுபோன்ற விக்கெட்டில் சர்வதேச டெஸ்ட் போட்டிகள் முதல் உள்நாட்டு கிரிக்கெட் வரை விளையாடி வருகிறோம். மேலும் எங்களுடைய வீரர்கள் சுழல் பந்துவீச்சுக்கு எதிராக மிகச்சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். குறிப்பாக மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். எனவே இதற்கு சுயமாக அவர்களே ஒரு வழியை கண்டுபிடித்து செயல்பட்டாக வேண்டும்.

- Advertisement -

இது ஒரு சவாலான ஆடுகளம் என்பது அனைவருக்கும் தெரியும். வெளிப்படையாக இப்படியான சவாலான சூழ்நிலைகளில் இந்திய அணி எப்பொழுதும் கைகளை உயர்த்தி மிகச் சிறப்பாக செயல்பட்டு மீண்டு வந்திருக்கிறது. இதுபோன்ற நிலைமைகளில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக இருந்திருக்கிறோம்.

இதையும் படிங்க : நான் அப்படியான அநியாயத்தை தினேஷ் கார்த்திக்குக்கு செய்யவில்லை.. நடந்தது இதுதான் – சங்கக்கரா விளக்கம்

எங்களுக்கு சவாலான சூழ்நிலையில் வெற்றி பெறுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு என்று நினைக்கிறோம். மேலும் எங்களுக்கு அடுத்தடுத்து பெரிய தொடர்கள் வரை இருக்கின்றன. அந்தத் தொடர்களிலும் நாங்கள் இப்படியான நிலைமைகளில் இருப்போம். எனவே நாங்கள் இப்படியான சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும்? என்பதை கண்டுபிடித்தாக வேண்டும். குறிப்பாக இது போன்ற சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் என்ன செய்தாக வேண்டும்? என்று நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -