நான் அப்படியான அநியாயத்தை தினேஷ் கார்த்திக்குக்கு செய்யவில்லை.. நடந்தது இதுதான் – சங்கக்கரா விளக்கம்

0
628
Sangakkara

இந்திய அணி முன்னாள் வீரஇந்திய அணி முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டு 17வது ஐபிஎல் சீசன் உடன் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்புவது குறித்து அதிரடி முடிவெடுத்திருக்கிறார். இதுகுறித்து குமார் சங்கக்கரா சில விஷயங்களை தெளிவுபடுத்தி கூறி இருக்கிறார்.ர் தினேஷ் கார்த்திக் நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டு 17வது ஐபிஎல் சீசன் உடன் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்புவது குறித்து அதிரடி முடிவெடுத்திருக்கிறார். இதுகுறித்து குமார் சங்கக்கரா சில விஷயங்களை தெளிவுபடுத்தி கூறி இருக்கிறார்.

தற்போது வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா இருந்து வருகிறார். மேலும் சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் வாங்கியிருக்கும் பார்ல் ராயல்ஸ் அணியின் டைரக்டர் ஆகவும் இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டதாக அறிவித்த தினேஷ் கார்த்திக் மீண்டும் சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் பார்ல் ராயல்ஸ் அணிக்கு விளையாடுவதற்கு இன்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து அந்த அணியின் டைரக்டர் குமார் சங்கக்கரா பேட்டியளித்திருக்கிறார்.

இதுகுறித்து குமார் சங்கக்கரா கூறும்பொழுது ” இது ஒரு தொழில்முறையாக விளையாடும் விளையாட்டு. இங்கு திறன் மற்றும் திறமை,ஆளுமை ரீதியாக மட்டுமே இல்லாமல், நீங்கள் நிதி ரீதியாகவும் மதிக்கப்படும் இடத்திற்கு செல்ல வேண்டும். இப்படி இருக்கும் பொழுது நட்பு ரீதியாக நான் எங்களுடைய அணியில் இணைவதற்கு தினேஷ் கார்த்திக்குக்கு அழுத்தம் கொடுத்து இருந்தால் அது அநியாயமானது. நான் அப்படி எதுவும் செய்யவில்லை.

- Advertisement -

எனக்கு தினேஷ் கார்த்திக்கை மிக நன்றாகவே தெரியும். கடந்த ஐபிஎல் சீசனில் நான் அவரைப் பார்த்த பொழுது கிரிக்கெட்டில் அவருக்கு ஆர்வம் மிக அதிகமாக இருந்தது. அவர் அபாரமானவராக தெரிந்தார். அவர் ஐபிஎல் தொடர் வரையில் ஓய்வு பெற்று விட்டதாலும், அவருக்கு ஆர்வம் இருந்ததாலும் அவரை நாங்கள் தேர்வு செய்வதற்கு எளிதாக இருந்தது.

இதையும் படிங்க : கம்பீர் அந்த 2 பேர வச்சு தப்பிக்க பாருங்க.. இனிமேலும் அந்த வேலையை செய்யாதிங்க – பாக் பசித் அலி அறிவுரை

அவர் எங்கள் அணியுடன் நன்றாக பொருந்தி போவார் என்று நான் நினைக்கிறேன். அவரை எங்கள் அணியில் வைத்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் அவருக்கு அணியில் இணைவதற்கு கொடுத்த வாய்ப்பை அவர் எடுத்துக் கொள்வதற்கு நேரம் எடுத்துக் கொண்டார். மேலும் என்னிடமும் அணி உரிமையாளரிடமும் தினேஷ் கார்த்திக் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருந்தார். எனவேதான் நாங்கள் அவரை ஒப்பந்தம் செய்ய முடிந்தது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -