நியூசிலாந்து நாளைக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அறிவிக்கப்பட்டிருந்த இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜனவரி 21ஆம் தேதி ஆரம்பித்து ஜனவரி 31ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைக்கு முன்பு நடைபெறுகின்ற தொடர் என்கின்ற காரணத்தினால் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
இந்திய அணிக்கு பின்னடைவு
தற்போது இந்திய டி20 அணியின் நட்சத்திர இளம் பேட்ஸ்மேன் திலக் வர்மா காயம் அடைந்து அறுவை சிகிச்சைக்காக வெளியேறியிருக்கிறார். அவர் காயம் குணமடைந்து இந்திய டி20 அணியில் மீண்டும் எப்பொழுது இணைவார் என்கின்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஒருவேளை அவர் டி20 உலகக் கோப்பைக்கு திரும்பலாம் என்றும், அதற்கும் கொஞ்சம் தாமதமாகும் என்றும் கூறப்படுகிறது.
இதே போல சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயமடைந்து வெளியேறி இருக்கிறார். அவரும் தற்போது இந்திய டி20 அணியில் இடம் பெறவில்லை. இவருடைய காயம் எப்போது குணமடைந்து திரும்புவார் என்பது குறித்தும் எந்த விதமான தகவல்களும் இல்லை.
இரண்டு புதிய வீரர்கள்
இந்த நிலையில் காயமடைந்து வெளியேறி உள்ள திலக் வர்மா இடத்திற்கு முதல் மூன்று டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெற்று இருக்கிறார். நீண்ட காலத்திற்குப் பிறகு அவருடைய பெயரை இந்திய டி20 அணியில் பார்க்க முடிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் சுந்தர் இடத்திற்கு அவரைப் போன்ற ஆப் ஸ்பின் ஆல்ரவுண்டர் யாரும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக முழுமையான பின்னர் ரவி பிஸ்னாய் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய டி20 அணிக்கு திரும்பியிருக்கிறார். மற்றபடி உலகக் கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட அதே அணியே தொடர்கிறது.
இதையும் படிங்க : இன்னைக்கு தொடர ஜெயிக்க முக்கியமான 2 மாற்றத்தை செஞ்சிருக்கோம்.. முடிவு பண்ண மாதிரி நடந்திருக்கு – கில் கருத்து
சூர்யகுமார் யாதவ்
அபிஷேக் சர்மா
சஞ்சு சாம்சன்
ஸ்ரேயாஷ் ஐயர்
ஹர்திக் பாண்டியா
ஷிவம் தூபே
அக்சர் படேல்
ரிங்கு சிங்
ஜஸ்பிரித் பும்ரா
ஹர்ஷித் ராணா
அர்ஷ்தீப் சிங்
குல்தீப் யாதவ்
வருண் சக்ரவர்த்தி
இஷான் கிஷன்
ரவி பிஷ்னோய்






