இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்திருக்கிறது. மேலும் இந்த போட்டி குறித்து டாஸ் நிகழ்வில் இந்திய கேப்டன் சுப்மன் கில் சில முக்கிய கருத்துகளை தெரிவித்திருக்கிறார்.
தற்போது நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளில் 2 அணிகளும் ஒரு போட்டியை வென்று தொடர் சமநிலையில் உள்ளது. இதன் காரணமாக இன்று நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டி இறுதிப் போட்டியாக மாறியிருக்கிறது.
இந்திய அணியின் மாற்றம்
இன்றைய போட்டியில் களம் இறங்கும் இந்திய அணியில் மிக முக்கியமான ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. விக்கெட் கைப்பற்றினாலும் தொடர்ந்து ரன்கள் கொடுத்து வரும் பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு அவருடைய இடத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட அர்ஸ்தீப் சிங் சேர்க்கப்பட்டு இருக்கிறார். நிதீஷ் குமார் ரெட்டிக்கு தொடர்ந்து இரண்டாவது வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதே சமயத்தில் நியூசிலாந்து இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய அதே பிளேயிங் லெவனை களம் இறக்கி இருக்கிறது. இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது போல ஒரு நாள் தொடரை வெல்லமும் நியூசிலாந்து அணி பெரிய உத்வேகத்துடன் களம் இறங்குகிறது.
இதைச் செய்ய வேண்டும்
இந்த போட்டிக்கான டாஸ் நிகழ்வில் இந்திய கேப்டன் சுப்மன் கில் பேசும் பொழுது “நாங்கள் டாஸ் என்றால் முதலில் பந்து வீசுவதாகவே முடிவு செய்திருந்தோம். அதன்படியே தாங்கள் டாஸ் வென்றது நல்ல விஷயமாக அமைந்திருக்கிறது. மேலும் இங்கு இரவில் பனிப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இத்துடன் நாங்கள் மிடில் ஓவர்களில் என்ன மாதிரியான லென்த்தில் வீச வேண்டும் என்பதில் சரியாக இருக்க வேண்டும். நாங்கள் ஸ்கோர் போர்டில் ரன்களை கொண்டு வந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : கம்பீர் உங்க டெல்லி பையன என்ன காரணத்துக்கு செலக்ட் பண்ணீங்க?.. பெரிய ரெக்கார்டு எதுவுமே இல்லையே – ராபின் உத்தப்பா கேள்வி
இந்திய பிளேயிங் XI: சுப்மன் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ரவீந்திர ஜடேஜா, நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் மற்றும் அர்ஸ்தீப் சிங்.






