டி20 உலகக் கோப்பை 2024

603 ரன் ஃபாலோ-ஆன்.. பல உலகச்சாதனை படைத்த போட்டி.. தெ.ஆ-வை சுருட்டி இந்திய அணி வரலாற்று வெற்றி

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கும் தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது. தற்போது ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய மகளிர் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மா 197 பந்துகளில் 205 ரன்கள், ஸ்மிருதி மந்தனா 161 பந்துகளில் 149 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 603 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.

இதற்கு அடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி சினேகா ராணா பந்துவீச்சில் 266 ரன்கள் எடுத்து சுருண்டு பாலோ ஆன் ஆனது. அந்த அணிக்கு மரிசானா கேம்ப் 141 பந்தில் 74 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் அபாரமாக பந்து வீசிய சினேகா ராணா எட்டு விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்தார்.

பாலோ ஆன் ஆகி இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு துவக்க வீராங்கனை கேப்டன் வோல்வார்ட் 314 பந்துகளில் 122 ரன்கள், சுனே லுஸ் 203 பந்துகளில் 109 ரன்கள் எடுக்க, தென் ஆப்பிரிக்க அணி 373 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய மணிக்கு 37 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு துவக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மா 24 பந்துகளில் 30* ரன்கள், சுபா சதீஷ் 26 பந்துகளில் 13* ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுக்க 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மேலும் ஒரே போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் என்பதால் இந்த போட்டியை வென்று தொடரையும் கைப்பற்றியது.

இதையும் படிங்க : கங்குலி எடுத்த 2 முக்கிய முடிவு.. இந்தியா உலக கோப்பையை வெல்ல செய்த பெரிய தியாகம்

மேலும் இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க வீராங்கனை ஷபாலி வர்மா அதிவேக இரட்டை சதம் அடித்திருந்தார். மேலும் முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைப்பு உலக சாதனை செய்யப்பட்டது. ஸ்னேகா ராணா எட்டு விக்கெட் கைப்பற்றி தனி சாதனை செய்தார். மேலும் 603 ரன்கள் குவித்ததின் மூலமாக பெண்கள் கிரிக்கெட்டில் ஒரு அணி அது குவித்த அதிகபட்ச ரன்னையும் பதிவு செய்தது. இந்த ஒரு டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு பல உலகச் சாதனை போட்டியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by
Tags: Ind vs sa w

Recent Posts