இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடரை கைப்பற்றி இருக்கிறது. இந்த அணிக்கு இந்திய முன்னாள் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக இருந்தார். அவருக்கும் ஒரு உலகக் கோப்பை மெடல் கிடைத்துவிட்டது. ஆனால் இந்திய கிரிக்கெட்டை மாற்றி அமைத்த முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு அது அமையவில்லை. ஆனாலும் இந்த உலகக் கோப்பை வெற்றியில் அவருக்கும் ஒரு முக்கிய பங்கு இருக்கிறது.
இந்திய அணியின் கிரிக்கெட் முகத்தை ஆக்ரோஷமாக மாற்றி அமைத்த முதல் கேப்டன் சவுரவ் கங்குலி. அதைவிட மிக முக்கியமாக இளம் வீரர்களுக்கு அதிகப்படியாக வாய்ப்புகள் கொடுத்து புது இந்திய அணியை உருவாக்கியது அவர்தான். அவர் உருவாக்கிய அணிதான் பின்பு இரண்டு உலகக்கோப்பைகளை தோனி தலைமையில் வென்றது.
இந்திய கிரிக்கெட்டில் மும்மூர்த்திகளாக பார்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் மற்றும் சவுரவ் கங்குலி மூவரில் இருவர் உலகக் கோப்பை மெடல்களை வாங்கிவிட்டார்கள். ஆனால் இதற்கான அடித்தளத்தை உருவாக்கிய கங்குலிக்கு அந்த சிறப்பான வாய்ப்பு வாழ்க்கையில் அமையவில்லை என்பது சோகம்.
ஆனாலும் கூட தற்பொழுது இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்று இருப்பதில் சவுரவ் கங்குலிக்கு பெரிய பங்கு இருக்கிறது. அவர்தான் ரோஹித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக வருவதற்கு சம்மதிக்க வைத்தார். மேலும் அவர்தான் இந்த அணிக்கு தனது நண்பரான ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக கொண்டு வருவதற்கு நீண்ட பேச்சு வார்த்தையை நடத்தி ஒத்துக் கொள்ள வைத்தார்.
தற்போது இவர்கள் இருவரது பொறுப்பில்தான் இந்திய அணி 13 வருடங்கள் கழித்து உலகக்கோப்பை தொடரை கைப்பற்றி இருக்கிறது. அவர் கிரிக்கெட் வாரிய தலைவர் பொறுப்பில் இருந்த பொழுது இந்தப் பெரிய முடிவுகளை எடுத்தார். அதே சமயத்தில் இதற்காக அவர் மிகப்பெரிய சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்தார்.
இதையும் படிங்க : மனம் உடைந்து போன தென் ஆப்பிரிக்க வீரர்கள்.. இந்திய ரசிகர்கள் செய்த செயல்.. கிரிக்கெட் உலகம் நெகிழ்ச்சி
விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து நகர்த்தப்பட்டதற்கு கங்குலிதான் மிக முக்கிய காரணம் என்று வெளியில் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. ஆனாலும் அந்த நேரத்தில் மிகப் பொறுமையாக பதில் கூறி அதைக் கடந்தார். தற்பொழுது அவர் செய்த மாற்றமே இந்திய அணிக்கு உலகக் கோப்பையை கொண்டு வந்திருப்பதாக ரசிகர்கள் இப்பொழுது பாராட்டி வருகிறார்கள்.