திடீரென பெரிய சிக்கலில் சிக்கிய இந்திய அணி.. என்ன நடக்கிறது? ஆஸி ஸ்ட்ராங் கம் பேக்!

0
2318
Rohit

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடக்கிறது.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தமது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். ஆஸ்திரேலியா அணியில் ஸ்டார்க், மேக்ஸ்வெல், மார்ஸ் ஆகிய நட்சத்திர வீரர்கள் திரும்ப வருகிறார்கள். மேலும் சுழற் பந்துவீச்சாளர் சங்காவுக்கு அறிமுகப் போட்டி தரப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இந்திய தரப்பில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் குல்தீப் யாதவ் அணிக்கு திரும்புகிறார்கள். ஹர்திக் பாண்டியா, சமி மற்றும் அஸ்வின் ஆகியோர் இடம் பெறவில்லை. இசான் கிஷான் காய்ச்சலால் இடம்பெறவில்லை. இன்றைய போட்டியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் முகமது சிராஜ் இருவரும் விளையாடுகிறார்கள்.

உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணிக்கு வீரர்கள் உடல்நலம் இல்லாமல் இருப்பது பெரிய தலைவலியாக திடீரென மாறியிருக்கிறது. மேலும் சில வீரர்கள் சொந்த காரணங்களுக்காக தங்கள் வீட்டுக்கு திரும்பி இருக்கிறார்கள். இதன் காரணமாக இன்று இந்திய அணிக்கு முழுமையான ஐந்து பேட்ஸ்மேன்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். மேலும் மொத்தமாக பேட்டிங் வரிசை ஏழு வரை மட்டும்தான் இருக்கிறது.

இந்த நிலையில் டாஸ் நிகழ்வின்போது பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா “இங்கு நிலைமைகள் சிறப்பாக உள்ளன. வானிலையும் நன்றாக இருக்கிறது. இந்த போட்டியை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஓய்வு என்பது உடல்ரீதியாக தேவைப்படாவிட்டாலும் மனரீதியாக தேவைப்படுகிறது. நாங்கள் விளையாடிய விதத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கிட்டத்தட்ட நாங்கள் விரும்பிய அனைத்தையும் செய்து முடித்தோம்.

- Advertisement -

மேலும் நாம் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. விக்கெட் கொஞ்சம் வறண்டு தெரிகிறது. மின்விளக்குகளுக்கு கீழ் இன்னும் சிறப்பாக மாறும். நாங்களும் இலக்கை துரத்தவே நினைத்தோம். இரண்டு புதிய பந்துகளையும் பந்துவீச்சில் எப்படி பயன்படுத்துவது? என்று பார்க்க வேண்டும்!”என்று கூறியிருக்கிறார்.

டாசில் வெற்றி பெற்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் கூறும்பொழுது ” நாங்கள் முதலில் பேட்டிங் செய்யப் போகிறோம். இது ஒரு நல்ல விக்கெட் போல தெரிகிறது. ஆனால் நூறு ஓவர்களில் எப்படி மாறும்? என்று தெரியாது. அனைவரும் விளையாட்டு நேரத்தை பெறுவது நல்ல விஷயம். முடிவுகள் எங்கள் வழியில் செல்லவில்லை. ஆனால் எங்களுடைய நாளில் இதை மாற்றி அமைக்க முடியும். நாங்கள் இங்கு நிறைய விளையாடி இருக்கிறோம். அதனால் எந்த ஆச்சரியமும் இல்லை!” என்று கூறி இருக்கிறார்!