ஹெட் அடிக்க ஆரம்பித்ததும் இந்திய அணி ஆட்டத்தை விட்டு ஓடி விட்டது – ஆஸ்திரேலியா லெஜன்ட் சர்ச்சை பேச்சு!

0
298
Head

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தான் விரித்த வலையில் தானே விழுந்து மாட்டிக்கொண்டது!

இந்த டெஸ்ட் தொடரில் நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான ஆடுகளம் ஓரளவுக்கு விளையாடக்கூடிய வகையில் இருந்தது. இதனால் ஆஸ்திரேலியா தரப்பில் எழுந்த இந்திய ஆடுகளங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் வீரியமற்று போயின!

- Advertisement -

இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு அமைக்கப்பட்ட இந்தூர் ஆடுகளம் ஏகப்பட்ட அளவில் திரும்பக் கூடிய வகையில் சுழற் பந்துவீச்சிக்கு எக்கச்சக்க சாதகத்தை கொண்டிருந்தது. இந்திய அணி இதை உணரும் முன்பாகவே முக்கிய விக்கட்டுகளை எல்லாம் பறிகொடுத்து முதல் இன்னிங்ஸில் 109 ரண்களுக்கு சுருண்டது.

ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் பந்து வீசியதாலும், லபுசேன் மற்றும் கவாஜா இடையே 96 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை வாய்ப்பு இருந்தும் முறியடிக்க முடியாமல் போனதால் ஆஸ்திரேலியா அணி 197 ரன்கள் எடுக்க அதில் கிடைத்த 88 ரன்கள் முன்னிலை இந்த போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி விட்டது.

அதற்குப் பிறகு விளையாடிய இந்திய அணி 163 ரன்களில் மீண்டும் சுருள ஆஸ்திரேலியா அணிக்கு 76 ரன்கள் இலக்காக கொடுக்கப்பட்டது. ஆஸ்திரேலியா அணி முதல் விக்கெட்டை சீக்கிரத்தில் இழந்தாலும், அதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த ஹெட் மற்றும் லபுசேன் இருவரும் தப்பாக விளையாடி அணியை 18 5.ஓவர்களில் வெற்றி பெற வைத்தார்கள். ஹெட் 53 பந்தில் 49 ரன்களை ஆட்டம் இழக்காமல் ஆறு பவுண்டரி ஒரு சிக்ஸர் உடன் எடுத்து அசத்தினார்.

- Advertisement -

தற்பொழுது ஆடுகளம் குறித்து பேசி உள்ள ஆஸ்திரேலிய லெஜன்ட் இயான் சேப்பல் ” ஆஸ்திரேலியாவில் கடைசி இரண்டு டெஸ்ட் தொடரை கைப்பற்றியதை இந்திய அணி மறந்துவிட்டதா? அணி நிர்வாகிகள், வீரர்கள், பயிற்சியாளர்கள் என ஆடுகள அமைப்பில் வெளியே இருந்தவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? அவர்கள் எதற்காக ஆடுகளம் எப்படி அமைய வேண்டும் என்பதில் தலையிடுகிறார்கள்?!” என்று கேள்வி எழுப்பி உள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” ஆஸ்திரேலிய முதல் இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சாளர்களை தரத்திற்கு குறைவாக பந்து வீச வைத்ததை நான் மிக முக்கியமாக கருதுகிறேன். இதன் மூலம் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் கொஞ்சம் லீட் எடுக்க முடிந்தது. அது கொஞ்சம் தான் என்றாலும் இந்த ஆடுகளத்தில் அது மிகவும் முக்கியமான ரன்கள். மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கட்டை முன்கூட்டியே இழந்தாலும், ஹெட் அதிரடியாக ஆட ஆரம்பித்ததும் இந்திய அணி ஆட்டத்தை விட்டு ஓடி விட்டது!” என்று கூறியிருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
“முதல் போட்டியில் ஹெட்டை தேர்வு செய்யாதது கேலிக்குரியது அது முட்டாள்தனம். குறைந்தபட்சம் ஆஸ்திரேலியா அவர்களின் வழியில் தங்கள் பிழைகளைப் பார்த்து சரி செய்திருக்கிறார்கள். இந்தியாவும் அப்படி அவர்களின் வழியில் தங்களின் பிழையை சரி செய்து கொள்ள வேண்டும். முயற்சி செய்வதைப் பற்றி பேசுகிறோம் முதலில் இந்தியா தனக்கான ஆடுகளத்தை தயார் செய்ய வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!