இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி; 12 பந்துகளில் 37 ரன்கள்: 2 பவுண்டரி 4 சிக்சர்கள் இர்பான் பதான் அசத்தல்!

0
1637
Irfan pathan

சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகளின் முன்னாள் வீரர்களை கொண்டு இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது!

இதில் மொத்தம் ஒவ்வொரு அணிக்கும் 5 ஆட்டங்கள் தரப்பட்டன. இந்த ஆட்டங்களின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்தப் புள்ளி பட்டியலில் இலங்கை முதல் இடத்தையும், அடுத்தடுத்த மூன்று இடங்களை ஆஸ்திரேலியா இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பிடித்தன. இந்த நான்கு அணிகளும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

- Advertisement -

இந்த தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடமும் மூன்றாம் இடமும் பிடித்த ஆஸ்திரேலிய, இந்திய அணிகள் நேற்று முதல் அரையிறுதிப் போட்டியில் ராய்ப்பூர் மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் முதலில் டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் சச்சின் தனது அணியை முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

இதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது, வாட்சன் 30(21), டூலன் 35(31), பென் டன்க் 46(26) ஆகியோர் கணிசமான பங்களிப்பை அளிக்க, 20 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலியா அணி 171 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அபிமன்யு மிதுன் மற்றும் இர்பான் பதான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து இந்திய அணிக்கு தொடக்கம் தர நமன் ஓஜா மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவரும் களமிறங்கினர். சச்சின் 10 ரன்களில் வெளியேறினார். இதற்கடுத்து சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ஸ்டூவர்ட் பின்னி, யூசுப் பதான் என யாருமே நிலைக்கவில்லை. ஆனால் ஒரு முனையில் நின்று விளையாடிய நமன் ஓஜா மிக அற்புதமாக விளையாடி 62 பந்துகளில் 90 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இதில் 7 பவுண்டரி 5 சிக்சர்கள் அடக்கம்.

- Advertisement -

இந்த நிலையில் 7-வது வீரராக களமிறங்கிய இர்பான் பதான் வெறும் 12 பந்துகளில் 37 ரன்களை 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் அடித்து இந்திய அணியை பாக வெற்றிபெற வைத்தார். 19.2 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இன்று இலங்கை வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மற்றும் ஒரு அரையிறுதிப் போட்டியில் மோதி வருகின்றன. இதில் வெல்லும் அணியோடு இந்திய அணி மோதும்!