இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் தனது மும்பை மாநில அணியை விட்டு கோவா மாநில அணிக்கு விளையாட கேட்டிருந்த நிலையில் தற்போது அதில் மிகப்பெரிய மாற்றம் நடந்திருக்கிறது.
தற்போது இந்திய அணிக்காகவும் மாநில கிரிக்கெட்டில் மும்பை அணிக்காகவும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் ஜெய்ஸ்வால் விளையாடிக் கொண்டு வருகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அதிக ரன்கள் குவித்த வீரராகவும் இருக்கிறார்.
சர்ச்சையான பின்னணி காரணம்
தற்போது அவர் விளையாடி வரும் மும்பை மாநில அணியின் கேப்டனாக இருக்கும் ரகானே உடன் ஜெய்ஸ்வாலுக்கு ஒத்துப் போகவில்லை எனவும், இதன் காரணமாக அவர் கோவா மாநில அணிக்கு செல்ல விரும்புகிறார் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவரும் மும்பை மாநில கிரிக்கெட் அசோசியேஷன் இடம் தனக்கு கோவா மாநில அணிக்கு செல்வதற்கு என்ஒசி வேண்டும் என விண்ணப்பித்திருந்தார்.
மேலும் மும்பை மாநில அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டிலுமே ஜெய்ஸ்வால் தனது எதிர்காலத்திற்காக கேப்டன் பதவியை எதிர்பார்க்கிறார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் கோவா மாநில அணியின் கேப்டனாக அவருக்கு பொறுப்பு கொடுக்கப்படுவதாக அவரே வெளியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மாறிய முடிவு காரணம் என்ன?
முதலில் இது குறித்து பேசி இருந்த ஜெய்ஸ்வால் கூறும் பொழுது “கோவா எனக்கு கேப்டன் பொறுப்பை கொடுத்திருக்கிறது. இந்திய அணிக்காக சிறப்பாக செயல்படுவதே என்னுடைய முதன்மையான நோக்கமாக இருக்கும். நான் இந்திய அணிக்காக விளையாடாத நேரங்களில் கோவா அணிக்காக விளையாடுவேன். அவர்களை தொடர்களில் ஆழமாக எடுத்துச் செல்ல முயற்சி செய்வேன். இது எனக்கு வந்த ஒரு முக்கியமான வாய்ப்பு நான் இதை ஏற்றுக் கொண்டேன்” என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. பிளே ஆப் சுற்றுக்கு செல்ல எந்த அணிகளுக்கு வாய்ப்பு
தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் ஜெய்ஸ்வால் கூறும் பொழுது ” தற்போது நான் உடனடியாக கோவாக்கு மாறுவதில் குடும்பத்திட்டங்களில் சில சிக்கல்கள் இருப்பதால், நான் கோவா அணிக்கு செல்வதற்கான என்ஓசி கேட்டதை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த ஆண்டு ரஞ்சித் சீசனில் நான் மும்பை அணிக்கு விளையாட விரும்புகிறேன். இதை மும்பை மாநில கிரிக்கெட் அசோசியேஷன் பரிசீலிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.






