ஒரு பவுலரா.. பும்ராகிட்ட இருந்து எதையுமே கத்துக்க முடியாது.. ஆனா இவர்கிட்ட நான் நிறைய விஷயங்களை எடுத்துக்கிறேன் – ஆர்சிபி வீரர் பேட்டி

0
28

இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால வேக பந்துவீச்சாளராக திகழ்ந்துவரும் ஆகாஷ் தீப், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாக தனது பிறந்த பந்துவீச்சு திறனை வெளிப்படுத்தினார்.

தற்போது வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பிடித்திருக்கும் நிலையில் தான் பின்பற்றி வரும் வேகப் பந்துவீச்சாளர்கள் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக இடம் பிடித்த பிகாரியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் 27 வயதான ஆகாஷ் தீப் ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கு பெற்று மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி தனது பந்துவீச்சு திறமையை வெளிப்படுத்தினார். அதற்குப் பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் முன்னணி வேக பந்துவீச்சாளர் பும்ராவின் வருகையினால் இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.

இருப்பினும் தற்போது நடைபெற உள்ள வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இவர் இடம் பிடித்திருக்கும் நிலையில் இது ஒரு முக்கிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில் தனது திறமையை நிரூபித்தால் இனி வரும் தொடர்களிலும் இவரது பெயர் இந்திய அணியில் நிச்சயம் இருக்கும் என்று கருத்துக்கள் வெளிவரும் நிலையில் பந்துவீச்சை பொறுத்தவரை தான் ஒரு பந்துவீச்சாளரை தொடர்ந்து பின்பற்றுவதில்லை என்றும், வெவ்வேறு பந்துவீச்சாளர்கள் இடமிருந்து சில திறன்களை பின்பற்றி வருவதாகவும் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் குறிப்பாக ஒரு பந்துவீச்சாளரை மட்டும் பின்பற்றுவதில்லை. உலகில் உள்ள அனைத்து பந்துவீச்சாளர்களுக்கும் வெவ்வேறு திறன் மற்றும் வெவ்வேறு தொழில்நுட்பம் உள்ளது. தங்களது தனித்துவமான வழிகளில் அனைவரும் உலகின் சிறந்த வீரர்களாக திகழ்கின்றனர். நான் தென் ஆப்பிரிக்க அணியைச் சேர்ந்த ரபாடாவை கொஞ்சம் பின்பற்றுகிறேன்.

ஆனால் பும்ராவை பின்பற்றுவது கடினம். அவர் ஒரு தனித்துவமான ஜாம்பவான் வீரர். பும்ரா கடவுளால் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டவர். அவரிடம் இருந்து என்னால் எதையும் கற்றுக் கொள்ள முடியாது. ஆனால் மற்றொரு பந்துவீச்சாளரான சிராஜிடமிருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். நான் பல்வேறு பந்துவீச்சாளர்களிடமிருந்து எனக்கு தேவையான விஷயங்களை எடுத்துக் கொள்கிறேன். ஆனால் நான் குறிப்பிட்டவாறு ஒருவரை மட்டும் அதிகம் பின்பற்றுவதில்லை.

இதையும் படிங்க:4,4,6,6,6,4.. மீண்டும் ஹெட் அதிரடி.. ஆல் அவுட் ஆகியும் ஆஸி வெற்றி.. இங்கிலாந்து அணி தோல்வி.. முதல் டி20

மேலும் ஷமி பாய் காயமடைந்திருக்கும் நிலையில் இது எனக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய பொறுப்பாக நான் நினைக்கிறேன். தேர்வாளர்கள் மற்றும் பிசிசிஐயையின் நம்பிக்கைக்கு ஏற்ப நான் முடிந்த வரையில் என்னால் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன். எனவே நான் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம்” என்று கூறி இருக்கிறார். இவர் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -