இந்திய கிரிக்கெட்

கம்பீர் செக் வைக்கும் 4 வீரர்கள்.. 2 உலக கோப்பைக்கு ரெடியாகும் மாஸ்டர் பிளான்ஸ்.. அதிரடி மாற்றங்கள்

இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வருகிறது. மேற்கொண்டு இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு அவர் விண்ணப்பிக்கவில்லை. மேலும் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக கவுதம் கம்பீர் வருவது ஏறக்குறைய உறுதியாகி இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் கம்பீர் ஜூலை மாத ஆரம்பத்தில் ஜிம்பாப்வே சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் இளம் இந்திய அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்க மாட்டார் என்றும் தெரிகிறது. ஜூலை மாத இறுதியில் இலங்கை செல்லும் இந்திய அணிவுடன் கம்பீர் தனது பயிற்சியாளர் பொறுப்பை துவங்குவார் என்று கூறப்படுகிறது.

கம்பீர் இந்திய அணிக்கு 3 1/2 ஆண்டு காலம் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருப்பார். இந்த காலகட்டத்தில் இந்திய அணி 2026ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என இரு வடிவத்திற்கான உலகக் கோப்பைகளை சந்திக்கிறது. அடுத்து 2027 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை சந்திக்கிறது.

இதன் காரணமாக புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்கும் கம்பீர் இந்த மூன்று பெரிய தொடர்களுக்கும் அணியை உருவாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறார். இடையில் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்க இருக்கிறது.

- Advertisement -

டி20 கிரிக்கெட் வடிவத்தில் கம்பீர் புதிய இந்திய அணியை உருவாக்குவது உறுதியானதாக இருக்கிறது. இந்த அணியில் நிச்சயம் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் இடம் இருக்காது. அதேபோல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சரியாக செயல்படாத வீரர்களை, அடுத்து 2027 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கம்பீர் கொண்டு செல்ல மாட்டார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ரோகித் கோலிக்கு இது கடைசி டி20 உலககோப்பை மட்டும் கிடையாது.. இதுவுமே முடிய போகுது – வாசிம் ஜாபர் பேட்டி

மேலும் அடுத்த ஆண்டில் நடக்க இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை இந்திய அணி வெல்லாவிட்டால், அதில் விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் சரியாக செயல்படாவிட்டால், அந்த வடிவத்திலும் நீக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த வகையில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சமி நால்வரும் கம்பீரின் செக் லிஸ்ட்டில் இருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது!

Published by