“இந்திய அணி மாஸ்தான்.. ஆனா இந்த பிரச்சினைதான் கவலையா இருக்கு!” – எச்சரித்த தென் ஆப்பிரிக்க கிரேம் ஸ்மித்!

0
1442
Smith

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி மிகவும் சிறப்பான முறையில் எல்லா துறைகளிலும் செயல்பட்டு விளையாடிய 6 போட்டிகளில் 6 போட்டிகளையும் வென்று அசத்தியிருக்கிறது.

இதன் மூலம் இந்திய அணி அரையிறுதி சுட்டுக் கொள் நுழைந்து விட்டது என்று கூறலாம். மற்ற அணிகள் 12 புள்ளிகள் மட்டும் எடுத்து உள்ளே வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும் நிலையில், இந்திய அணி ஏறக்குறைய அரையிறுதி சுற்றுக்குள் சென்று விட்டது.

- Advertisement -

இந்திய அணி நடக்கும் உலகக் கோப்பை தொடரில் அடுத்து இலங்கைக்கு எதிராக நவம்பர் இரண்டாம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுகிறது. இதற்கு அடுத்து கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நவம்பர் 5ஆம் தேதி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடுகிறது. கடைசி போட்டி நெதர்லாந்து அணிக்கு எதிராக அமைந்திருக்கிறது.

இந்திய அணி அதிகாரப்பூர்வமாக அரையிறுதி சுற்றுக்குள் சென்றதை அறிவிக்கும் விதமாக இலங்கை அணிக்கு எதிராக மும்பையில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் என்று பரவலாக கணிக்கப்படுகிறது.

மேலும் இலங்கைக்கு எதிரான போட்டிக்கும் காலில் காயம் அடைந்துள்ள இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம்பெற மாட்டார் என்று தெரிய வருகிறது. அதற்கு அடுத்த தென்னாப்பிரிக்க போட்டிக்கும் இருக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. நெதர்லாந்து போட்டியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணி பற்றி தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் கூறுகையில் “உலகக் கோப்பை தொடரில் இந்தியா மிகவும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்திய அணியை இதுவரை எந்த அணியும் சோதிக்கவில்லை.

இங்கிலாந்துக்கு எதிராக 230 ரண்களில் அவர்கள் ஆட்டம் இழந்து இருந்தாலும் கூட, அந்த ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கொஞ்சம் கடினமான ஆடுகளம் என்று தெரிய வருகிறது.

இந்தியா எப்பொழுதுமே உள்நாட்டில் தோற்கடிப்பதற்கு மிகவும் கடினமான அணி என்பதில் சந்தேகம் கிடையாது. இந்திய அணி சமநிலை பெற்ற ஒரு அணியாக இருக்கிறது. அவர்களிடம் நல்ல வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற் பந்து வீச்சு ஆயுதங்கள் இருக்கின்றன. அவர்கள் எல்லா தளத்தையும் உள்ளடக்கிய அணியாக இருக்கிறார்கள்.

ஆனால் தற்போது இந்திய அணிக்கு கவலை அளிக்கக் கூடிய விஷயமாக இருப்பது ஒரு ஆல் ரவுண்டரின் இடம்தான். இந்திய அணிக்கு சவால் அளிக்கக்கூடிய அணி உடன் மோதும் பொழுது, ஆரம்பத்தில் நான்கு விக்கெட்டுகளை இழந்து விட்டால் அந்த இடத்தில் அந்த ஆல்ரவுண்டரின் தேவை ஏற்படும். எனவே தற்போது கவலைக்குரிய விஷயம் இது மட்டும்தான்!” என்று கூறி இருக்கிறார்!