“உலக கோப்பையில் இந்திய அணி விராட் கோலியை சார்ந்து இல்லை இவரிடம்தான் இருக்கிறது” – ஹர்பஜன் சிங் ஆச்சரியமான கருத்து!

0
850
Harbhajan

மற்ற எந்த வடிவிலான கிரிக்கெட் உலகக் கோப்பைகளையும் விட நான்கு வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பும், பரபரப்பும் மிக அதிகமாக இருக்கும்!

இந்த முறை அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் இந்த ஆண்டில் நடக்க இருப்பதால், இந்திய ரசிகர்களிடையே இந்திய அணி மீதான எதிர்பார்ப்பும் உலகக் கோப்பை குறித்தான பரபரப்பும் மிக அதிகமாக ஆரம்பித்திருக்கிறது!

- Advertisement -

சொந்த நாட்டில் நடப்பது ஒருபுறம் சாதகம் என்றாலும், இன்னொரு பக்கத்தில் வெல்ல வேண்டிய கட்டாயம் இருப்பது அணிக்கு ஒரு சின்ன நெருக்கடியையும் அழுத்தத்தையும் உண்டாக்கி இருக்கிறது என்று கூறலாம். இந்த முறை எப்படியான அணிகள் அமையும் என்பது குறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்துக்கள் இருக்கிறது.

இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தனது முதல் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது. உலகக் கோப்பையில் மொத்தமாகவும், இந்தப் போட்டியிலும் யார் முக்கியமான வீரர்களாக இருப்பார்கள் என்று ஹர்பஜன் சிங் தனது கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“நான் இந்தியாவைப் பற்றி பேசினால் அது இந்தியாவின் தொடக்க ஜோடியை பற்றியதாகத்தான் இருக்கும். இந்த முறை இந்திய அணி அதிகமாக ரோகித் சர்மாவை சார்ந்தே இருக்கும். இவருடன் இளம் வீரர் கில் விளையாடுவார். இவர் ரோகித் சர்மாவுடன் இல்லை என்றால் அது துரதிஷ்டவசமானதுதான்.

- Advertisement -

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் கீ பேட்ஸ்மேனாக இளம் வீரர் சுப்மன் கில் இருப்பார். அவர் இந்திய சூழ்நிலைகளில் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். பந்துவீச்சை எடுத்துக் கொண்டால் இந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட ரவிந்திர ஜடேஜா இந்தியாவிற்கான கீ பவுலராக இருப்பார்.

ஆஸ்திரேலியா அணியை எடுத்துக் கொண்டால் அந்த அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் மிகவும் ஆபத்தானவர். அவர் பேட்டிங் பந்துவீச்சு என்று மட்டும் இல்லாமல் ஃபீல்டிங்கிலும் தன்னை கொண்டு வருபவர்.

இதேபோல் அவர்களது பந்துவீச்சு துறையை எடுத்துக் கொண்டால் ஆடம் ஜாம்பா முக்கியமானவராக இருப்பார். அவர் இந்திய சூழ்நிலைகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். ஆஸ்திரேலியா அணியில் இந்த இருவரும் கீ ப்ளேயர்களாக இருப்பார்கள்!” என்று கூறியுள்ளார்!