இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணிக்கு தற்பொழுது பதில் அளித்து வருகிறது. இதில் விராட் கோலி அஜாஸ் படேல் பந்துவீச்சில் அடித்த சிக்சர் மூலமாக இந்திய அணி முதல் அணியாக உலக சாதனை ஒன்றை படைத்திருக்கிறது.
இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 46 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இதைத் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணிக்கு ரச்சின் ரவீந்தரா அபார சதம் அடிக்க அந்த அணி 402 ரன்கள் குவித்தது. இந்திய அணி 356 ரன்கள் பின் தங்கியது.
இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ்
இதைத்தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் 52 பந்தில் 35 ரன்கள், கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 63 பந்தில் 52 ரன்கள் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் இளம் வீரர் சர்பராஸ் கான் இருவரும் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக விளையாடி ஆச்சரியப்படுத்தினார்கள். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியில் இருவருமே அரை சதம் கடந்தார்கள்.
விராட் கோலி சிக்ஸரில் இந்திய அணி உலக சாதனை
விராட் கோலியின் இந்த இன்னிங்ஸில் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் பந்துவீச்சில் இறங்கி வந்து நேராக ஒரு சிக்சர் அடித்தார். இதன்மூலம் இந்த வருட கிரிக்கெட் காலண்டர் இயரில் இந்திய அணி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நூறாவது சிக்சரை பதிவு செய்தது.
இதன் மூலம் ஒரு காலண்டர் இயரில் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்கள் அடித்த முதல் அணி என்ற சிறப்பான சாதனையை இந்திய அணி படைத்திருக்கிறது. இதற்கு முன்பு மிக அதிகபட்சமாக இங்கிலாந்து அணி 2022 ஆம் ஆண்டு 89 சிக்ஸர்கள் அடித்தது இருந்தது. அதை ஏற்கனவே முறியடித்திருந்த இந்திய அணி 100 சிக்ஸர்கள் அடித்து மேலும் ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது.
இதையும் படிங்க : கேமராவை திருப்பி.. ரவி சாஸ்திரியிடம் வசமாக மாட்டிய 3 இந்திய வீரர்கள்.. வாத்து விருந்து என வித்தியாசமான முறையில் விமர்சனம்
ஒரு கிரிக்கெட் காலண்டர் வருடத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணிகள் :
102* – 2024 இந்தியா
89 – 2022 இங்கிலாந்து
87 – 2021 இந்தியா
81 – 2014 நியூசிலாந்து
71 – 2013 நியூசிலாந்து






