வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு ; இளம் வீரர்களுக்கு வாய்ப்பு ; மூத்த வீரர்களுக்கு இடமில்லை!

0
3772
Hardikpandya

இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை ஆஸ்திரேலியா அணியிடம் தோற்ற பிறகு, மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்குச் சுற்றுப்பயணம் செய்கிறது.

இந்தச் சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் இந்திய அணிக்கான வீரர்கள் பட்டியல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு, டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

- Advertisement -

தற்பொழுது அக்டோபர் நான்காம் தேதி துவங்கி அக்டோபர் 13ஆம் தேதி வரையில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி சற்று நேரத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த முறையும் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோருக்கு இந்திய டி20 அணியில் இடம் அளிக்கப்படவில்லை. மேலும் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடாத ராகுல் திரிபாதிக்கும் டி20 அணியில் இடம் அளிக்கப்படவில்லை.

அதே சமயத்தில் டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்ட ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகச் சிறப்பாக செயல்பட்ட இளம் இடதுகை பேட்ஸ்மேன் திலக் வர்மாவுக்கு முதல்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இதேபோல் ஒருநாள் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்ட விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் சஞ்சு சம்சானுக்கு இந்த அணியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமாருக்கு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் வாய்ப்பு தொடர்கிறது.

மிகப்பெரியதாக எதிர்பார்க்கப்பட்ட, இந்த வருட ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மிகச் சிறப்பாக செயல்பட்ட ரிங்கு சிங்குக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேபோல் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் வாய்ப்பு தரப்பட்ட ருதுராஜுக்கு டி20 அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் டி 20 தொடருக்கான ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி:

பேட்ஸ்மேன்கள் : சுப்மன் கில், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ்.

விக்கெட் கீப்பர்கள் : இஷான் கிஷான் மற்றும் சஞ்சு சாம்சன்.

ஆல் ரவுண்டர்கள் : ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் படேல்.

ஸ்பின்னர்கள் : குல்தீப் யாதவ், சாகல், ரவி பிஷ்னோய்.

ஃபாஸ்ட் பவுலர்கள் : அர்ஸ்தீப் சிங், ஆவேஷ் கான், உம்ரான் மாலிக் மற்றும் முகேஷ் குமார்.