சூரிய குமாரை சேர்த்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அதிரடி இந்திய அணி அறிவிப்பு!

0
5101
ICT

ஆஸ்திரேலியா ஆண்கள் கிரிக்கெட் அணி பிப்ரவரி மாதம் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் விளையாடுகிறது!

நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தகுதிக்கு ஆஸ்திரேலியா அணி உடன் இந்திய அணி மோதும் டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்குமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

தற்பொழுது இந்த நான்கு போட்டிகளுக்கான டெஸ்ட் தொடருக்கு முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி தற்பொழுது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அணிக்கு ரோகித் சர்மா கேப்டன் ஆகவும், கே எல் ராகுல் துணை கேப்டன் ஆகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி :

ரோகித் சர்மா, கே எல் ராகுல், புஜாரா, விராட் கோலி, சுப்மன் கில், ஸ்ரேயாஸ், சூரியகுமார், கே எஸ் பரத் விக்கெட் கீப்பர், இஷான் கிஷான் விக்கெட் கீப்பர், அஸ்வின், அக்சர் படேல், குல்தீப், ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனட்கட்.

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயம் சரியாக காரணத்தால் தற்பொழுது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.