வெற்றியோ தோல்வியோ.. ரோகித்கிட்ட அந்த ஒரு விஷயம் மாறவே மாறாது.. நானும் அதை கத்துகிறேன் – சூரியகுமார் பேட்டி

0
38

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள நிலையில், இரண்டு அணி வீரர்களும் தற்போது தீவிரமான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் இந்திய டி20 அணியின் கேப்டனான சூரியகுமார் யாதவ் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கேப்டன் ஆன ரோஹித் சர்மா குறித்து சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய தென் ஆப்பிரிக்கா டி20 தொடர்

இந்தியா கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோசமான தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து அதற்கு அடுத்ததாக சூரியகுமார் யாதவ் தலைமையிலான டி20 கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் டி20 போட்டி இந்திய நேரப்படி நாளை இரவு நடைபெற உள்ளது.

மேலும் ரோஹித் சர்மா தலைமையிலான டெஸ்ட் அணி வருகிற 22ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள நிலையில் ஒரு பிரிவு இந்திய அணியினர் ஆஸ்திரேலியாவில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் சூரியகுமார் யாதவ் வெற்றி தோல்வி என எது வந்தாலும் ரோகித் சர்மாவிடமிருந்து சமநிலையை பறிக்க முடியாது எனவும் அவரிடம் இருந்து தான் கற்றுக் கொள்ளக் கூடிய குணாதிசயம் அதுதான் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

- Advertisement -

ரோஹித் சர்மாவிடமிருந்து கற்றுக் கொள்ளக் கூடிய விஷயம்

இதுகுறித்து சூரியகுமார் விரிவாக கூறும்போது “விளையாட்டைப் பொறுத்தவரை வெற்றி தோல்வி என்பது மிகவும் சகஜமான ஒன்றுதான். எல்லாரும் கடினமாக உழைக்கிறார்கள் அனைவரும் வெற்றி பெற கடுமையாக உழைக்கிறார்கள். சில நேரங்களில் அது வேலை செய்யும், சில நேரங்களில் அது வேலை செய்யாது. நான் ரோகித் சர்மாவிடமிருந்து கற்றுக் கொள்ளக் கூடிய விஷயம் என்றால் வெற்றி தோல்வி என எது வந்தாலும் ரோகித் சர்மா ஒரே சமநிலையோடு
இருப்பார். நல்ல நேரமோ கெட்ட நேரமோ என எதுவாக இருப்பினும் அவருடைய குணாதிசயம் மாறுவதை நான் பார்த்ததில்லை.

இதையும் படிங்க:ஐபிஎல்-ல் எங்க அம்பயர்ஸ் சம்பாதிக்க ஆசைப்படறாங்க.. அதான் இஷானை தண்டிக்கல – வார்னர் மனைவி விமர்சனம்

அவர் ஒரு வீரராகவும், தலைவராகவும் வளர்ந்து வருவதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு தலைவர் ஒரு அணி என்ன மாதிரியான வடிவமைப்பை விளையாட விரும்புகிறது என்று வரையறுக்கிறார். ஒரு கேப்டன் எப்போதும் வெற்றி பெற விரும்புவார். ஆனால் ஒரு தலைவர்தான் ஒரு அணி விளையாடக்கூடிய பாணியை முன்னிலைப்படுத்துகிறார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -