இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 107 ரன்களை நிர்ணயித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணி வெற்றி வாய்ப்பு குறித்து இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
107 ரன்கள் வெற்றி இலக்கு
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆட்டமிழக்க அதற்க்கு பிறகு களம் இறங்கிய நியூசிலாந்துஅணி தனது முதல் இன்னிங்ஸில் 402 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு களம் இறங்கிய இந்திய அணி அதிரடி ஆட்டத்தை மேற்கொண்டு தனது இரண்டாவது இன்னிங்ஸில் 462 ரன்கள் குவித்தது.
இந்த சூழ்நிலையில் இன்று கடைசி மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 107 ரன்களை நிர்ணயித்துள்ளது. இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் நியூசிலாந்து அணியை குறைந்த ரன்களில் சுருட்ட வேண்டியது மிகவும் அவசியம். இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா இந்தியா வெற்றி பெறுவது குறித்து எதார்த்தமாக பார்த்தால் நம்பிக்கை இல்லை எனவும் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் இந்திய அணியில் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் இல்லை எனவும் கூறி இருக்கிறார்.
இந்தியா வெற்றி பெறுவதில் சந்தேகம்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம். ஆனால் ஆடுகளம் அதற்கு தகுந்தவாறு இல்லை. சில ஈரப்பதத்தின் காரணமாக ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்க சாதகமாக உள்ளது. நியூசிலாந்து அணி வளர்ந்த விதத்தை கருத்தில் கொண்டால் இது அவர்களுக்கு எளிதாக இருக்கும். எங்கெல்லாம் சிரமம் இருக்கிறதோ அங்கெல்லாம் அவர்கள் நன்றாக விளையாடுவது போல பழகிவிட்டார்கள்.
இதையும் படிங்க:இவரோட விக்கெட்ட எடுத்துட்டா அவ்ளோதான்.. மக்கள் உங்கள சீக்கிரம் வெறுத்துருவாங்க – ஆஸி நாதன் லயன் பேட்டி
107 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிர்ணயத்துள்ளது. ஆனால் இதனை எதார்த்தமாக பார்த்தால் எனக்கு இந்ததியா வெற்றி பெறுவது எந்த நம்பிக்கையும் இல்லை. ஏனென்றால் ஆடுகளம் ஈரப்பதமாக இருக்கும் நிலையில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். காலையில் நீங்கள் வேகப்பந்து வீச்சில் துவங்கும் போது ஒன்று அல்லது இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் அதற்குப் பிறகு தாக்குதல் தொடுக்க மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் இல்லை” என்று கூறி இருக்கிறார். இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சிராஜ் மற்றும் பும்ரா மட்டுமே வேகப்பந்து வீச்சாளர்களாக செயல்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.