இந்திய கிரிக்கெட்

சாம்சனை கைவிட மாட்டேன்.. நாளை வரை பொறுத்திருங்க.. ஒரு நியூஸ் வரப்போகுது – சூரியகுமார் யாதவ் தகவல்

இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் சஞ்சு சாம்சன் மேல் தாங்கள் அக்கறை கொண்டுள்ளதாகவும் நாளை வரை பொறுத்திருந்தால் நல்ல விஷயங்கள் வரும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

2025 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு இடையேயான போட்டி மூலம் துவங்குகிறது. நாளை துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தியா மற்றும் யுஏஇ அணிகள் மோதிக் கொள்கின்றன. இதற்கு முன்பான சம்பிரதாய பத்திரிக்கையாளர் சந்திப்பில் சூரியகுமார் யாதவ் கலந்து கொண்டார்.

சஞ்சு சாம்சனின் எதிர்காலம் என்ன?

இந்த நிலையில் இன்று பத்திரிக்கையாளர்கள் இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவிடம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வந்த சஞ்சு சாம்சங் தொடர் வாய்ப்புகள் கொடுக்கப்படுமா? அவருடைய கிரிக்கெட் எதிர்காலம் என்ன? ஆசிய கோப்பையில் அவர் விளையாடுவாரா? என்பது குறித்து கேள்விகளை முன் வைத்தார்கள்.

இதுகுறித்து பதிலளித்த சூரியகுமார் யாதவ் பத்திரிகையாளர்களிடம் நகைச்சுவையாக ” நான் உங்களுக்கு போட்டிக்கு முன்பாக பிளேயிங் லெவனை அனுப்பி வைத்து விடுகிறேன். நாங்கள் அவர் மேல் உண்மையான அக்கறை கொண்டு கவனித்து வருகிறோம். நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாளை சரியான முடிவை எடுப்போம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சவால்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்

மேலும் யுஏஇ அணி பற்றி பேசிய சூரியகுமார் யாதவ் “யுஏஇ பரபரப்பான ஒரு கிரிக்கெட் பிராண்டை விளையாடி வருகிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற முடிந்த முத்தரப்பு தொடரில் அவர்கள் போட்டியை வெல்ல முடியாவிட்டாலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நெருங்கி வந்தார்கள். இந்த தொடர் அவர்களுக்கு இன்னொரு படிக்கட்டு. அவர்கள் ஆசியக் கோப்பையில் இதை கடக்கட்டும். இதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்”

இதையும் படிங்க : இந்தியா NO 1 அணி என்று யார் சொன்னது?.. இங்கு அப்படியெல்லாம் எதுவும் கிடையாது – பாகிஸ்தான் கேப்டன் பேச்சு

“மேலும் நாங்கள் இறுதியாக ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் ஒன்றாக இணைந்து விளையாடினோம். அதற்குப் பிறகு எங்கள் அணியின் வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் விளையாடினார்கள். அடுத்து தற்போதுதான் நாங்கள் ஒரு அணியாக சேர்ந்திருக்கிறோம். எனவே நாளையில் இருந்து சவால்கள் ஆரம்பிக்கிறது அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts