இந்தியா NO 1 அணி என்று யார் சொன்னது?.. இங்கு அப்படியெல்லாம் எதுவும் கிடையாது – பாகிஸ்தான் கேப்டன் பேச்சு

0
100
Surya

இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்ட பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா டி20 கிரிக்கெட்டில் நிச்சயம் வெல்வார்கள் என்று யாரும் கிடையாது என இந்திய அணி குறித்து பதில் அளித்து இருக்கிறார்.

2025 ஆசிய கோப்பைத் தொடர் இன்று துவங்குவதற்கு முன்பாக 8 அணிகளின் கேப்டன்களும் பங்கு பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இந்திய அணி குறித்த கேள்விக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளின் கேப்டன்கள் பதில் அளித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

ஆசிய மற்றும் உலகச் சாம்பியன்

தற்போது ஆசியக் கோப்பை தொடர் டி20 வடிவத்தில் நடைபெற இருக்கிறது. இந்தியா அணி டி20 வடிவத்தில் உலகச் சாம்பியன் ஆக இருந்து வருகிறது. அதே சமயத்தில் ஆசியச் சாம்பியன் ஆகவும் இருக்கிறது. எனவே இந்திய அணி இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டிய கட்டாய நெருக்கடி நிலைமை உருவாகியிருக்கிறது.

இந்த ஆசிய கோப்பை தொடரில் கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ள அணியாக இந்திய அணி கணிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக இந்திய கேப்டன் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் இருவரிடமும் கேள்வி முன்வைக்கப்பட்டது.

- Advertisement -

உங்களிடம் யார் சொன்னது?

இதுகுறித்து பதில் அளித்த சூரியகுமார் யாதவ் பேசும் பொழுது ” இந்தியா பேவரைட் என உங்களுக்கு யார் சொன்னது இதுபோல நான் எதுவும் கேள்விப்படவில்லை. நீண்ட காலமாக நான் டி20 வடிவத்தில் விளையாடி வருகிறேன். உங்கள் தயாரிப்புகள் சிறந்ததாக இருந்தால் நீங்கள் நம்பிக்கையுடன் களமிறங்குவீர்கள். மேலும் நாங்கள் இங்கு வந்த மூன்று நாட்களில் எங்களுக்கு சில நல்ல பயிற்சி அமர்வுகள் கிடைத்தது. நாங்கள் நல்ல முறையில் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க : கம்பீர் நடத்திய 3 நிமிட பேச்சு.. சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது.. உறுதியான தகவல்.. பயிற்சியில் என்ன நடந்தது?

இது குறித்து பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா கூறும் பொழுது “டி20 கிரிக்கெட்டில் இவர்கள்தான் வெல்வார்கள் என்று ஃபேவரைட் யாரும் கிடையாது. ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட நாளில் நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டும். இந்த வடிவ கிரிக்கெட் மிக வேகமாக விளையாடப்படுகிறது. இரண்டு ஓவரில் இங்கு எல்லாமே மாறிவிடும். நாங்கள் முத்தரப்பு தொடரை வென்று தயாராக வேண்டும் என்று கூறி இருந்தேன். இப்போது நாங்கள் சிறந்த முறையில் தயாராகி விட்டோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -