ரஞ்சிப் போட்டியில் விளையாட இருக்கும் இந்திய சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன்!

0
307
ICT

தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற கடுமையான போட்டி சில அணிகளிடம் ஏற்பட்டு உள்ளது!

இந்த போட்டியில் தற்போது ஆஸ்திரேலியா தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகள் முன்னணியில் இருக்கின்றன!

தற்பொழுது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்க தொடரில் ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்க அணியை முழுதாக வெல்லும் பட்சத்தில் இந்திய அணிக்கு அது மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்!

அதே சமயத்தில் இந்திய அணி அடுத்து பங்களாதேஷ் அணியுடன் நடக்க உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெல்லும் பட்சத்தில் இன்னும் இறுதிப் போட்டிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்!

இதற்கு அடுத்து பிப்ரவரி மாதத்தில் இந்திய அணி தனது உள்நாட்டில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 இல்லை3-1 என்று வெல்லும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு உறுதிப்படுத்திக் கொள்ளும்.

இந்த நிலையில், இந்திய அணியின் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மிகப்பெரிய பேட்ஸ்மேனாக உருவெடுத்து இருக்கும் மும்பையைச் சேர்ந்த சூரியகுமார் யாதவ் தற்பொழுது நடந்து வரும் ரஞ்சித் டிராபி தொடரில் தனது மும்பை அணிக்காக ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டிசம்பர் 20ஆம் தேதி களம் இறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!

ஆஸ்திரேலியா அணியுடன் உள்நாட்டில் நடைபெற உள்ள மிக முக்கியமான டெஸ்ட் தொடரில் சூரியகுமார் இடம்பெறவும் வாய்ப்புகள் உள்ளதால், அவர் இதற்காக தன்னை தயார்படுத்திக் கொள்ள மும்பை அணிக்காக ரஞ்சித் தொடரில் விளையாட இருக்கிறார் என்று தெரிய வருகிறது!